திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டி சர்ட் எழுதினால் தமிழ் வளராது.. ஆக்குப்பூர்வமாக எதையாவது செய்யுங்கள்.. வானதி ஸ்ரீனிவாசன்

Google Oneindia Tamil News

திருப்பூர்: டி- சர்ட்டில் எழுதினால் தமிழ் வளராது. தமிழுக்கு ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்யுங்கள் வானதி சீனிவாசன் பேட்டி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    டி சர்ட் எழுதினால் தமிழ் வளராது.. வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி - வீடியோ

    விவசாயிகளுக்கான உதவித் திட்டத்தில் தகுதி அற்ற நபர்கள் பயன்பெறுகிறது. அதை தடுத்து முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் வானதி சீனிவாசன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயனிடம் மனு அளித்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்தித் திணிப்பை மத்திய அரசு செய்யவில்லை. திணிப்பு தவறு என்பதை பாஜக ஒப்புக் கொள்கிறது. மும்மொழிக் கொள்கை என்பது ஏதேனும் ஒரு மொழியை கற்பதற்கான வாய்ப்பு.

    எஸ்.பி சரண் சொன்னபடி வந்த நல்ல செய்தி.. எஸ்.பி.பிக்கு கொரோனா நெகட்டிவ்.. வெண்டிலேட்டர் நீக்கம்!எஸ்.பி சரண் சொன்னபடி வந்த நல்ல செய்தி.. எஸ்.பி.பிக்கு கொரோனா நெகட்டிவ்.. வெண்டிலேட்டர் நீக்கம்!

    ஹிந்தி படிக்க மாட்டோம்

    ஹிந்தி படிக்க மாட்டோம்

    அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்கள் தான் இரண்டு மொழியை கற்கிறார்கள். ஏழைக் குழந்தைகளும் மூன்றாம் மொழியை கற்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து. ஆனால் மொழி அரசியலில் பதவி சுகத்தை அனுபவித்து, அதிகாரத்தை ருசித்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் டி சர்ட் மூலம் ஹிந்தி படிக்க மாட்டோம் என பரப்புகின்றனர்‌.

    மூன்றாம் மொழி

    மூன்றாம் மொழி

    நீங்கள் வேறு மொழி கூட படியுங்கள்,வேறு மொழியை கற்பதை தடை செய்யக்கூடாது. உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் படிக்க வேண்டாம். திமுக வை சேர்ந்தவர்கள் குடும்ப குழந்தைகள் எத்தனை பேர் ஹிந்தி மொழி படிக்காமல் இருக்கிறார்கள், திமுகவினர் நடத்தும் எந்தெந்த பள்ளிகளில் மூன்றாம் மொழி கற்பிக்கப்படுகிறது என எங்களுக்கு தெரியும்.

    தமிழ் வளர்ப்பு

    தமிழ் வளர்ப்பு

    எதற்காக இந்த இரட்டை வேடம்‌. மொழி அரசியலில் சுகம் கண்ட நீங்கள் மீண்டும் 2021ல் அதே மொழி அரசியலை தூண்டி விட நினைக்கிறீர்களா? இன்றைய இளைய சமுதாயம் விழித்துக்கொண்டு உள்ளது. நீங்களும் டி சர்ட் போடலாம். ஆயிரக்கணக்கில் எங்கள் இளைஞர்களும் டி சர்ட் போட துவங்கி விட்டனர். மொழி திணிப்பல்ல. இது தமிழ் வளர்ப்பு.

    உண்மை

    உண்மை

    தமிழை தாய் மொழியில் கற்க வேண்டும். தாய் மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பதே புதிய கல்வி கொள்கை.5 வகுப்பு வரை கட்டாயம் தமிழ் மொழியில் தான் கற்க வேண்டும். அதைப்பற்றி பேசாமல் தமிழை டிசர்ட்ல் எழுதினால் மட்டும் வளராது. உண்மையாகவே தமிழை பள்ளிக்கூடங்களில் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்.

    டி சர்ட்

    டி சர்ட்

    அதை நாங்கள் வரவேற்கிறோம். டி சர்ட் தமிழ் வளர்ந்ததாக சரித்திரம் இல்லை. அதனால் தமிழுக்கு ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்தார். நான் ஒரு தமிழ் பேசும் இந்தியன், ஹிந்தி தெரியாது போடா என ஹிந்திக்கு எதிராக நடிகர்கள் டிசர்ட் அணிந்தது பிரபலமான நிலையில் வானதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    English summary
    BJP Senior leader Vanathi Srinivasan says that Tamil will not grow in T Shirt. Try to do some constructive steps.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X