திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தும் பணம் கட்ட முடியாமல் நிராகரித்த மாணவி.. அரசு உதவுமாறு கண்ணீர்

Google Oneindia Tamil News

திருப்பூர்: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் தனியார் மருத்துவ கல்லூரியில் படிப்பு செலவை அரசே ஏற்பதாக அறிவித்தும் மருத்துவப் படிப்பை படிக்கமுடியாமல் போனதாக அரசு பள்ளி மாணவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மேலும் தனது மருத்துவர் கனவை நனவாக்க அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Recommended Video

    பணம் இல்லாததால் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தும் சேர முடியாமல் தவிக்கும் மாணவி - வீடியோ

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தளி பகுதியை சார்ந்தவர் துல்பியா. இவரது தந்தை வாகன ஓட்டுநர். பொருளதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தாலும் பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நல்ல முறையில் படித்து வந்த துல்பியா ஆசிரியர்கள் உதவியோடு நீட் தேர்வும் எழுதி தேர்ச்சி பெற்றார்.

    Video goes viral that a girl requests MBBS seat in private college

    அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு அறிவித்த 7.5 இடஒதுக்கீட்டின்படி தனியார் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தபோதும் பணம் கட்ட முடியாததால் கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வந்தார். ஒதுக்கபட்ட இடத்தில் துல்பியா சேராததால் இவருக்கு பின் உள்ளவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது.

    இதனிடையே தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் படிப்பு செலவை அரசே ஏற்பதாக அறிவித்தது. இருப்பினும் துல்பியாவுக்கு இடம் கிடைத்தும் அவரால் பணம் செலுத்த முடியாததால் வேண்டாம் என தெரிவித்துவிட்டதால் அந்த இடம் வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டது.

    புரு அகதிகள்.. பற்றி எரியும் திரிபுரா- போலீஸ் துப்பாக்கிச் சூடு- வன்முறை- 2 பேர் பலி!புரு அகதிகள்.. பற்றி எரியும் திரிபுரா- போலீஸ் துப்பாக்கிச் சூடு- வன்முறை- 2 பேர் பலி!

    இதனால் அரசின் அறிவிப்பு இவரை போன்ற மாணவர்களுக்கு பலனின்றி போய்விட்டது. எனவே அரசு தனக்கு மருத்துவப் படிப்பை படிக்க ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டுமென துல்பியா தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க வீடியோவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

    English summary
    Plus 2 student from Tiruppur requests Tamilnadu Government to give MBBS seat as she passed in Neet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X