திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாத்ரூமில் குளிப்பதை டிரோன் மூலம் வீடியோ எடுப்பதா.. தனியார் சர்வே நிறுவனம் மீது பெண்கள் பாய்ச்சல்!

குளிப்பதை வீடியோ எடுத்த தனியார் நிறுவனத்துக்கு விவசாயிகள் கண்டனம்

Google Oneindia Tamil News

Recommended Video

    பாத்ரூமில் குளிப்பதை டிரோன் மூலம் வீடியோ எடுப்பதா.. போராட்டத்தில் குதித்த பெண்கள்

    திருப்பூர்: "ஏங்க.. பாத்ரூமில் குளிக்கிறதை எல்லாமா வீடியோ எடுக்கிறது" என்று ஆளில்லா விமானத்தில் வீடியோ மூலம் நில அளவீடு பணிகள் மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் மீது விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

    திருப்பூர் கண்டியன் கோவில் கிராமத்தில் சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில், பாரத் பெட்ரோலிய நிறுவனம் குழாய் பதிப்பதற்காக சட்டவிரோதமாக ஆளில்லா விமானம் மூலம் வீடியோ மூலம் நில அளவீடு பணிகளை மேற்கொண்டது. இந்தநிறுவனம் மீதுதான் அந்த பகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர்.

    village people complaint against bpcls drone

    "எங்க கிராமத்துல பெரும்பாலானோருக்கு மேற்கூரை இல்லாத பாத்ரூம்கள்தான் இருக்கு. எல்லா பொம்பளைங்களும் தோட்டத்தில் வேலை செய்றோம். அப்போ சேலைகள் விலகிடுது... விவசாய வேலைகளில் மூழ்கியிருப்பதால் இதை கவனிப்பதில்லை.

    village people complaint against bpcls drone

    இந்த பகுதியில் போன 14ம் தேதியில் இருந்து பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பாக ஆளில்லா விமானம் மூலம் படம் பிடிக்கப்படுகிறது. அப்படி படம்பிடிக்கப்பட்ட போது, மேற்கூரை இல்லாமல் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்த பெண்கள், சேலை விலகிய நிலையில் வேலை செய்த பெண்களையும் வீடியோ எடுக்க வாய்ப்புள்ளது. இது சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள தனிப்பட்ட உரிமையை மீறிய செயல்.

    village people complaint against bpcls drone

    என்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்!என்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்!

    அதனால், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் இந்த செயல் பெண்களின் மானத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. சட்டவிரோதமாக படம் பிடிக்க உத்தரவிட்ட அதிகாரி மற்றும் படம் பிடித்த நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்" என்று கூறினர். மேலும், இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட விவசாயிகள் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்திலும் திரண்டு வந்து மனு அளித்தனர்.

    English summary
    village people complaint against Bharat Petroleum Corporation Limiteds drone near tiruppur
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X