திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது என்னன்னு தெரியுதா பாருங்க.. சிவப்பு கலரில்.. நல்ல உசரமாய்.. அலறி அடித்து கொண்டு ஓடிய மக்கள்!

திருப்பூர் அருகே சுழட்டி அடித்த சூறை காற்று வீடியோ வைரலாகிறது

Google Oneindia Tamil News

திருப்பூர்: இது என்னன்னு தெரியுதா பாருங்க? இதை பார்த்துதான் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு வீடுகளுக்குள் புகுந்து கொண்டனர்!!

Recommended Video

    திருப்பூரில் திடீரென தோன்றிய சிவப்பு சுழல்காற்று

    திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இங்கு கடந்த சில தினங்களாகவே நல்ல வெயில் சுட்டெரித்தது.

    viral video about, sudden wind blowing brick kiln near tiruppur

    இந்நிலையில், நேற்று சாயங்காலம் திடீரென திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை சாரல் பெய்தது... ஆனால் மழை வருவதற்கு முன்பாக உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் காற்று பலமாக வீசியது.

    குறிப்பாக சீல்நாயக்கன்பட்டி கிராமத்தில் இந்த காற்றின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது.. இங்கு ஒரு தனியார் சூளை இயங்கி வருகிறது.. வழக்கம்போல் சூளையில் தொழிலாளர்கள் செங்கல் அறுத்து கொண்டிருந்தனர்.. அப்போதுதான பலத்த காற்று வீச ஆரம்பித்தது.. அது செங்கல் சூளை என்பதாலும், செம்மண் இருந்ததாலும், சுழல்காற்று ரெட் கலரில் உருவாகியது.

    சுழட்டி சுழட்டி சுழல்காற்று உருவாகி மேகத்துக்கும் தரைக்குமாக சுழன்றது.... உஸ்ஸ்ஸ்.. என்ற சத்தத்துடன் சிவப்பு நிறத்தில் சுழல்காற்று அவ்வளவு உயரத்துக்கு பிரமாண்டமாக நிற்கவும் இதை பார்த்து தொழிலாளர்கள் அலறி அடித்து வீடுகளுக்குள் ஓடினார்கள்.

    இதைதான் அங்கிருந்த ஒரு தொழிலாளி தன்னுடைய செல்போனில் விடியோ எடுத்து பதிவிட்டார்.. இந்த வீடியோ பதிவு இப்போது படு வைரலாகி வருகிறது. இந்த சுழல் காற்று கிட்டதட்ட 2 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்ததாக தெரிகிறது.. ரெட் கலரில் சுழல்காற்று வானத்துக்கும் பூமிக்குமாக நிற்பதை பொதுமக்கள் மிரண்டு பார்த்து வருகின்றனர்!

    English summary
    sudden wind blowing brick kiln near tiruppur and this video becomes viral on socials now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X