திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கமல்ஹாசன் எங்களோடு கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம்.. கேஎஸ் அழகிரி சூசகம்

Google Oneindia Tamil News

திருப்பூர்: மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தனித்து நின்று ஓட்டை பிரிக்காமல் வலுவான எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்தார்.

Recommended Video

    கமல்ஹாசன் எங்களோடு கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம்.. கேஎஸ் அழகிரி சூசகம் - வீடியோ

    கொங்கு மண்டலத்தில் ராகுல்காந்தி வருகின்ற 23ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    அந்த சூழ்நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கலந்து கொண்டார் .

    ராகுல் காந்தி

    ராகுல் காந்தி

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழ் வணக்கம் என்கிற தலைப்பிலான ராகுல் காந்தியின் பிரச்சார நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பரவி இருக்கிறது. இம்முறை கொங்கு மண்டலத்தில் ராகுல் காந்தியின் வருகை எழுச்சிகரமானதாக இருக்கும். மேலும் நாடாளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தி தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரப்புரையை விட 5 மடங்கு அதிக பிரச்சாரம் மேற்கொள்வார்

    கலந்துரையாடல்

    கலந்துரையாடல்

    கோவையில் தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் ராகுல் காந்தி, திருப்பூரில் தொழிலாளர்களோடு கலந்துரையாடி புதிய தொழிற்கொள்கையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கேட்டறியவுள்ளார். .புதுச்சேரியில் கூட்டணிக்குள் எது நடந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. ஆனால் நண்பர்களோடு இணக்கமான சூழ்நிலையை விரும்புகிறோம். அதேவேளையில் தனியாக நிற்கவும் தயாராக இருக்கிறோம். ஆனால் தமிழகத்தில் எங்கள் கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை .

    வலுவான கூட்டணி

    வலுவான கூட்டணி

    மதசார்பின்மையில் நம்பிக்கை உள்ள மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் எங்களோடு கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். தனித்து நின்று ஓட்டை பிரிப்பதற்கு பதில் வலுவான எங்கள் கூட்டனியோடு நின்று தேர்தலை எதிர்கொள்ளலாம். ரஜினிகாந்தை நாங்கள் காங்கிரஸிற்கு ஏற்கனவே அழைத்தோம்.

    ரத்த அழுத்தம்

    ரத்த அழுத்தம்

    ஆனால் பாஜகவினர் கொடுத்த அழுத்தம் அவருக்கு ரத்த அழுத்தம் ஏற்படும் அளவிற்கு கொண்டு சென்றுவிட்டது. ரஜினிகாந்தின் ரசிகர்களின் ஆதரவு எப்போதும் காங்கிரஸிற்கு இருக்கிறது ரஜினி ரசிகர்கள் எங்களோடு அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்.

    தடுப்பூசி

    தடுப்பூசி

    ராகுல்காந்தி பிரச்சார பயணமாகவே தமிழகம் வருகிறார். தேர்தல் தொடர்பான கூட்டணி உடன்பாடு இவையெல்லாம் குறித்து ஆலோசிக்க தேர்தல் சமயத்தில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்திப்பார். அண்டை நாடுகளில் கொரோனா தடுப்பூசியை அந்தந்த பிரதமர்கள் , அதிபர்கள் செலுத்தி பொது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். அதுபோல இந்தியாவிலும் அதே நடைமுறையை பின்பற்றி பிரதமர் , மத்திய அமைச்சர்கள் செலுத்தியிருந்தால் பொது மக்களிடையே நிலவும் அச்சத்தை தவிர்த்து இருக்கலாம்" இவ்வாறு கூறினார்.

    English summary
    Tamil Nadu Congress Committee Chairman KS Alagiri said, "We will welcome makkal needhi maiam leader Kamal Haasan to stand alone and come to our strong alliance without splitting the vote".
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X