For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்.. தமிழர் வரலாறு.. கீழடி ஆராய்ச்சியில் முதல்வர் பழனிச்சாமி படுவேகம்.. அடுத்தடுத்த அதிரடி!

கீழடி ஆராய்ச்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழின் புகழை உலகம் முழுக்க கொண்டு சென்று இருக்கிறார்.

Recommended Video

    கீழடியில் கிடைத்தவை என்ன?.. வியக்கவைக்கும் தமிழனின் வரலாறு | Keeladi Agalvaraichi in Tamil

    சென்னை: கீழடி ஆராய்ச்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழின் புகழை உலகம் முழுக்க கொண்டு சென்று இருக்கிறார். மேலும் கீழடியில் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ள தேவையான உதவிகளை தமிழக அரசு முடிக்கிவிட்டுள்ளது.

    TN CM Edappadi Palanisamy focuses on Tamil development and Keezhadi Civilization research

    கடந்த சில நாட்களுக்கு முன் மஹிந்திரா நிறுவன அதிபர் ஆனந்த் மஹிந்திரா முக்கியமான டிவிட் ஒன்றை செய்து இருந்தார். அதில், அதில் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ்தான் உலகின் மூத்த மொழிகளில் ஒன்று என்று தெரிவிக்கும் வரை, நான் அது பற்றி அறியாமல் இருந்து விட்டேன். இதற்காக வெட்கப்படுகிறேன்.

    இப்படியான ஒரு சிறந்த மொழியையும் அதன் பெருமையையும் மொத்த இந்தியாவுக்கும் பரப்பிட வேண்டும். என்று குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் அவர் தனது இன்னொரு டிவிட்டில், நான் உதகமண்டலத்தில் உள்ள போர்டிங் பள்ளியில்தான் படித்தேன். அங்கு தமிழ் படித்திருக்க வேண்டும். ஆனால் நான் படிக்காமல் போய்விட்டேன், என்று குறிப்பிட்டும் இருந்தார்.

    அவரின் இந்த டிவிட் பிரதமர் மோடியின் ஐநா சபை உரையை தொடர்ந்து செய்யப்பட்டது. கடந்த வாரம் பிரதமர் மோடி தமிழ் குறித்து ஐநாவில் பேசினார். அவர் தனது பேச்சில், உலகின் பழமையான மொழியின் தாயகமாக தமிழ்நாடு உள்ளது.

    TN CM Edappadi Palanisamy focuses on Tamil development and Keezhadi Civilization research

    உலகம் பல்வேறு நாடுகளாக பிரிந்து இருந்தாலும் வாழும் மனிதர்கள் அனைவரும் ஒரே இனம் தான். நாம் எல்லோரும் ஒரே குடும்பம். இதை உலகின் மிக மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பாடல் வாயிலாக புலவர் கணியன்பூங்குன்றனார் உலகிற்கு உரைத்துள்ளார், என்று பிரதமர் மோடி பேசினார்.

    இவரின் இந்த தமிழ் குறித்த பேச்சு உலக அரங்கை திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது. உலகமே தமிழ் குறித்த இதனால் பேச தொடங்கி உள்ளது. பிரதமர் மோடியின் இந்த உரைக்கும், தமிழ் திடீர் என்று உலகம் முழுக்க வைரலாகவும் காரணாம் தமிழக அரசு என்று கூறலாம். ஆம், தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகள்தான் இதற்கு காரணம்!

    உலகின் மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழி தமிழ். உலகின் நாகரீகத்திற்கு எல்லாம் மூத்த நாகரீகம் தமிழ் நாகரீகம். இதை கண் முன் உணர்த்தும் சாட்சியாக எழுந்து நிற்கும் இடம்தான் கீழடி! அயனாவரம் தொடங்கி ஐநா வரை தமிழ் மொழி ஒலிப்பதற்கு காரணமும் இந்த கீழடிதான்! கீழடி ஆராய்ச்சி காரணமாக தமிழின் புகழ், தமிழின் புகழ் உலகம் எங்கு பரவி வருகிறது.

    மதுரையில் இருந்து தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இந்த கிராமத்தின் பெயரை சொன்னால், ஒரு காலத்தில் யாருக்கும் தெரியாது. ஆனால் இப்போது இந்த சிறிய கிராமம்தான் மனித இனத்தை அடையாளமாக உருவெடுத்து வருகிறது .

    TN CM Edappadi Palanisamy focuses on Tamil development and Keezhadi Civilization research

    முதலில் இங்கு செய்யப்பட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மூலம்தான் இங்கு முதன்முதலாக ஆராய்ச்சி தொடங்கப்பட்டது. அப்போது தொடங்கிய ஆராய்ச்சி தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    இங்கு தற்பொழுது அகழாய்வு செய்யப்பட்டுவரும் இடம் 3.5 கி.மீ சுற்றளவுடன் 80 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. முதற்கட்ட ஆய்வுகளின்படி கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை வரலாறு கொண்டது இந்த பகுதி என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கடுத்த ஆய்வுகளில் இங்கு உள்ள பொருட்கள் எல்லாம் கி.மு. 6ம் நூற்றாண்டை சேர்ந்தது என்று நிரூபணம் ஆகியுள்ளது.

    கீழடி என்பது வைகை நதி நாகரீகம் ஆகும். இங்கு கிடைத்த பொருட்கள் மூலம் ஒரு வளர்ச்சியடைந்த சமூகத்தில்தான் தமிழக மக்கள் 2600 வருடங்களுக்கு முன்பே வாழ்ந்து இருக்கிறார்கள். அப்போதே அவர்கள் தமிழில் பேசி உள்ளனர். அவர்கள் தமிழ் பிராமி எழுத்துக்களை எழுதி படித்துள்ளார். அப்போதே மிகச்சிறந்த கலாச்சாரம் கொண்டவர்களாக அவர்கள் இருந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

    TN CM Edappadi Palanisamy focuses on Tamil development and Keezhadi Civilization research

    அதேபோல் கழிவு நீர் குழாய், தனி சுடுகாடு, தொழிற்கூடங்கள், தண்ணீர் சேமிப்பு, உணவு மேலாண்மை, கட்டிட அமைப்பு என்று 2600 வருடங்களுக்கு முன்பே தமிழன் மற்ற எல்லா மனித குலத்திற்கும் முன்னோடியாக திகழ்ந்து இருக்கிறான் என்பதும் உறுதியாகி உள்ளது.

    இதுவரை கீழடியில் 5 கட்ட அகழாய்வு நடந்துள்ளது. இதில் 3ம் கட்ட அகழாய்வு கொஞ்சம் தொய்வு அடைந்தாலும். 4 மற்றும் 5ம் கட்ட அகழாய்வு வேகமாக நடத்தப்பட்டது. இதன் அறிக்கை தற்போது தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டு இருக்கும் இந்த அறிக்கைதான் இந்தியாவின் வரலாற்றை மாற்றி அமைக்கும் ஒன்றாக அமைந்துள்ளது.

    கீழடி அகழாய்வில் மற்ற அரசுகளை விட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் கீழ்தான் கீழடி ஆராய்ச்சி வேகம் எடுத்தது என்று கூறலாம். மத்திய, மாநில தொல்லியல் துறைகளை சரியாக ஒருங்கிணைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்த பணிகள்தான் இந்த ஆராய்ச்சி வேகம் எடுக்க காரணம் என்று கூட கூறலாம்.

    TN CM Edappadi Palanisamy focuses on Tamil development and Keezhadi Civilization research

    3ம் கட்ட ஆராய்ச்சி தேக்கம் அடைந்து இருந்த நிலையில் தற்போது 4 மற்றும் 5ம் கட்ட ஆராய்ச்சி முடிந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பெயரில் இந்த ஆராய்ச்சி சிறப்பாக, கட்டுகோப்பாக செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளது. இந்த கார்பன் முடிவுகள் மூலம்தாம் தமிழ் நாகரீகம் 2600 வருடம் பழமை வாய்ந்தது என்று நிரூபணம் ஆனது.

    தமிழக அரசு இது தொடார்பாக வெளியிட்ட ஆய்வு அறிக்கை இந்தியா முழுக்க தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. மேலும் கீழடியில் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அங்கு மேலும் ஆராய்ச்சிகளை தொடங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். இதனால் விரைவில் 6ம் கட்ட ஆய்வு இங்கு தொடங்க உள்ளது.

    ஆம் இதுவரை கீழடியில் 5 கட்ட ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் இதோடு முடியாது. அங்கு இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. அங்கு 6வது கட்ட ஆய்வுகள் தொடர்ந்து கீழடியில் மேற்கொள்ளப்படும். கீழடியில் 6வது கட்ட ஆய்வை முதல்வர் பழனிசாமி துவங்கி வைப்பார் .4 மற்றும் 5ம் கட்ட ஆய்வு பணிகளை செய்ய இதுவரை 1.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    TN CM Edappadi Palanisamy focuses on Tamil development and Keezhadi Civilization research

    அதேபோல் 6ம் கட்ட ஆய்வு பணிகளை மேற்கொள்ள கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி தமிழக அரசு சார்பாக தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் கீழடி அகழாய்வு தொடர்பாக மத்திய அரசிடம் முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட உள்ளது.

    அதன்படி இங்கு உலகத்தரம் வாய்ந்த அருட்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. அதற்காக மத்திய அரசிடம் நிதி உதவி கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இங்கு பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய மண்பாண்டபொருட்கள், கட்டிட அமைப்புகள், நாழி, தங்கம் என அகழ்வாராய்ச்சிப் பணியில் கண்டெடுக்கப்பட்ட பல வரலாற்று பொருட்கள்,சுவடுகள் அனைத்தையும் கீழடியில் இரண்டு ஏக்கர் 10 சென்ட் பரப்பளவில் அருங்காட்சியம் கட்டப்பட்டு வைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

    அதுமட்டுமின்றி தமிழை வளர்க்க உலகம் முழுவதும் 1000 இடங்களில் தமிழ் வளர் மையம் அமைக்க தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே பிரான்ஸ் நாட்டில் தமிழ் வளர் மையம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கீழடி ஆய்வால் நாடு மொத்தமும் தமிழகத்தை, தமிழக அரசை திரும்பி பார்த்துள்ளது. அதேபோல் ஆனந்த் மஹிந்திரா உட்பட பல தொழில் அதிபர்கள் இதனால் தமிழின் பெருமையை சமூக வலைத்தளங்களில் பேச தொடங்கி உள்ளனர்.

    இதற்கு எல்லாம் காரணமாக கீழடி ஆராய்ச்சி அமைந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் முன்னெடுப்பும் தீவிரமான திட்டமிடலும்தான் இந்த ஆராய்ச்சி துரிதமாக நடக்க காரணம் என்றால் அது மிகையாகாது! தமிழக அரசு தொடர்ந்து இங்கு ஆராய்ச்சியை மேற்கொள்ள முடிவு செய்திருப்பதும் வரவேற்க வேண்டிய விஷயம் ஆகும்!

     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X