For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

41 ஒப்பந்தங்கள்.. ரூ. 8835 கோடி முதலீடு.. கலக்கிய முதல்வர் பழனிச்சாமி.. தமிழகத்திற்கு ஜாக்பாட்!

தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணத்தில் செய்யப்பட்ட 41 ஒப்பந்தங்கள் மூலம் 8835 கோடி ரூபாய் முதலீடு தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    திட்டமிட்டு பக்காவாக செயல்படும் முதல்வர் பழனிச்சாமி.. வெளிநாட்டு பயணத்தின் பின்னணி

    சென்னை: தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணத்தில் செய்யப்பட்ட 41 ஒப்பந்தங்கள் மூலம் 8835 கோடி ரூபாய் முதலீடு தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளது.

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாட்டு பயணம் தமிழகத்திற்கு பெரிய அளவில் முதலீடுகளை பெற்று தந்துள்ளது. உலகின் முக்கிய நிறுவனங்கள் இந்த பயணத்திற்கு பின் தமிழகத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் ஒரு பக்கம் சரிந்து வருகிறது.

    TN CM Edappadi Palanisamy singed 41 MOU in his foreign trip: Here is the full details

    ஆனால் அப்போதும் கூட தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சமீபத்திய வெளிநாட்டு பயணம்தான் இதற்கு பிள்ளையார் சுழி போட்டது என்று கூட கூறலாம்.

    தன்னுடைய ஆட்சியின் அடையாளமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமி இந்த வெளிநாட்டு முதலீடுகளை கருதுகிறார். எதிர்கால சந்ததியும் இந்த முதலீடுகள் குறித்து பேசவேண்டும் என்று அவர் கருதுகிறார். வெளிநாட்டு பயணத்தில் அவர் திட்டமிட்டது போல, தற்போது தமிழகத்தை நோக்கி முக்கிய முதலீடுகள் திரும்பிய வண்ணம் இருக்கிறது.

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மாதம் மூன்று நாடுகளுக்கு வெளிநாடு பயணம் மேற்கொண்டார். இரண்டு வாரங்கள் இந்த பயணம் நீடித்தது. தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை அதிகமாக ஈர்க்கும் வண்ணம் இந்த பயணம் அமைந்தது. இங்கிலாந்தில் லண்டன், அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் பழனிச்சாமி பயணம் மேற்கொண்டார்.

    முதல்வரின் வெளிநாட்டு பயணத்தில் மொத்தம் 41 ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ மற்றும் நியூயார்க் ஆகிய மாகாணங்களில் மொத்தம் 27 முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலமும் 5085 கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்படும். இதன் மூலம் மொத்தம் 24720 பேர் வேலை பெறுவார்கள்.

    இது இல்லாமல் தனியாக அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ மற்றும் நியூயார்க் ஆகிய மாகாணங்களில் மொத்தம் 8 நிர்வாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் நடந்த முதலீட்டு மாநாட்டில் மொத்தம் 6 முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 3750 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளது. மேலும் இதன் மூலம் 10,800 பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.

    மொத்தமாக இந்த 41 ஒப்பந்தங்கள் மூலம் 8835 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 35520 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

    இது இல்லாமல் இன்னும் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் நிலையில் உள்ளது. ஹால்டியா பெட்ரோகெமிக்கல்ஸ் (Haldia Petrochemicals) நிறுவனம் 50000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 5000 பேர் வேலை பெறுவார்கள். மேலும் ரேவாச்சூர் எல்எல்சி (Revature LLC) நிறுவனம் ஐடி துறையுடன் சேர்ந்து முதலீடுகளை செய்ய உள்ளது.

    அதேபோல் வழிகாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரண்டும் செய்யப்பட உள்ளது. துபாயில் உள்ள பிசினஸ் லீடர்ஸ் போரம் மற்றும் ஐடிஇசி நிறுவனம் மற்றும் அமெரிக்காவில் உள்ள அமெரிக்க தமிழ் சங்க தொழில்முனைவோர் அமைப்பு இரண்டும் தமிழகத்தில் வழிகாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்ய உள்ளது.

    TN CM Edappadi Palanisamy singed 41 MOU in his foreign trip: Here is the full details

    முதல்வரின் பயணத்தில் செய்யப்பட்ட 41 ஒப்பந்தங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

    அமெரிக்கா - நியூயார்க்கில் செய்யப்பட்ட முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:

    1. ஜேன் மார்ட்டின் (Jean Martin) நிறுவனம் 80 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 500 பேருக்கு வேலை கிடைக்கும். டேட்டா ஆராய்ச்சி, ஏஐ, பிளாக் செயின், மெஷின் லேர்னிங் ஆகிய தொழில்நுட்ப பணிகளில் இந்த முதலீடு செய்யப்படும்.

    2. ஏக்யூயூஐஎல் சிஸ்டம் (AQUIL System) நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 200 பேருக்கு வேலை கிடைக்கும். ஐடி துறையின் மேம்பட்ட பிரிவு தொழில்நுட்ப பணிகளில் இந்த முதலீடு செய்யப்படும்.

    3. ஸ்சிடஸ் பார்மா சர்விஸ் பிரைவேட் லிமிடேட் (Scitus Pharma Services Pvt Ltd) நிறுவனம் 75 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 300 பேருக்கு வேலை கிடைக்கும். பாரா மெடிக்கல் மற்றும் பயோ பாராமெடிக்கல் துறைகளில் செய்யப்படும் கிளினிக்கல் ஆராய்ச்சிகளுக்கு இந்த முதலீடு பயன்படும்.

    4. நுர்ரே கெமிக்கல்ஸ் (Nurray Chemicals) நிறுவனம் 75 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 300 பேருக்கு வேலை கிடைக்கும். ஐடி துறையில் பயன்படும் ஏபிஐ (API) எனப்படும் அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டர்பேஸ் (Application programming interface) துறையில் இந்த முதலீடு செய்யப்படும்.

    5. நோவிடியம் (Novitium) நிறுவனம் 75 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 300 பேருக்கு வேலை கிடைக்கும். பல்வேறு சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளில் செய்யப்படும் அதி நவீன வளர்ச்சிகள் மற்றும் சோதனைகளுக்கு இந்த முதலீடு பயன்படுத்தப்படும்.

    6. எமர்சன் (Emerson) நிறுவனம் 130 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 110 பேருக்கு வேலை கிடைக்கும். தொழில்துறை ஆட்டோமேஷன் தயாரிப்புகள் & சேவைகளுக்கு இந்த முதலீடு பயன்படுத்தப்படும்.

    7. ஜோகோ ஹெல்த் (JOGO Health) நிறுவனம் 15 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 50 பேருக்கு வேலை கிடைக்கும். நரம்புத்தசை தொடர்பான நோய்களை குணப்படுத்த செய்யப்படும் டிஜிட்டல் மருந்து ஆராய்ச்சியில் ஆராய்ச்சி மற்றும் உற்பத்திகளை மேற்கொள்ள இந்த முதலீடு பயன்படும்.

    8. எஸ்டி எல்என்ஜி எல்எல்சி (ST LNG LLC) நிறுவனம் 1050 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 15000 பேருக்கு வேலை கிடைக்கும். இந்த நிறுவனம் திரவ இயற்கை எரிபொருள் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் விற்பனையில் கவனம் செலுத்தும்.

    9. அஸ்பயர் கன்சல்டிங் (Aspire Consulting) நிறுவனம் 70 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 200 பேருக்கு வேலை கிடைக்கும். ஐடி நிறுவனங்களில் கன்சல்டிங் துறை மற்றும் சைபர் பாதுகாப்பிற்கு இந்த முதலீடு முக்கியத்துவம் கொடுக்கும்.

    10. சில்லியன் டெக்னாலஜி (Zillion Technology) நிறுவனம் 70 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 200 பேருக்கு வேலை கிடைக்கும். ஐடி நிறுவனங்களில் தீர்வுகள், ஆர்புஏ மற்றும் சைபர் பாதுகாப்பிற்கு இந்த முதலீடு முக்கியத்துவம் கொடுக்கும்.

    11. லிங்கே டெக்னாலஜி (Linkay Technologies) நிறுவனம் 1000 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 500 பேருக்கு வேலை கிடைக்கும். ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் ( Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் இந்த முதலீடு செய்யப்படும்.

    12. பிசோஃபோர்ஸ் (Bizoforce) நிறுவனம் 40கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 500 பேருக்கு வேலை கிடைக்கும். டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன் (Digital Transformation) துறையில் இந்த முதலீடு செய்யப்படும்.

    நியூயார்க்கில் செய்யப்பட்ட இந்த 12 முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 2780 கோடி ரூபாய் ஆகும். மொத்தமாக இதன் மூலம் 18,160 பேருக்கு வேலை கிடைக்கும்.

    அமெரிக்கா - நியூயார்க்கில் செய்யப்பட்ட நிர்வாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:

    13. யுஎஸ்- இந்தியா எஸ்எம்இ கவுன்சில் (US India SME Council) ஒப்பந்தம்

    14. லீக் நியூயார்க் பிபிசி (League Network PBC) ஒப்பந்தம்.

    15. சனம் 4 (Sanam 4) ஒப்பந்தம்.

    16. யுஎஸ்ஐஎஸ்பிஎப் + ஹை டெக் எம்அப்ஜி (USISPF + HI TECH MFG) ஒப்பந்தம்.

    அமெரிக்கா - சான்பிரான்சிஸ்கோவில் செய்யப்பட்ட முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:

    17. காபிசாப்ட் (Kapisoft) நிறுவனம் 36 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 25 பேருக்கு வேலை கிடைக்கும். நிறுவன பாதுகாப்பு (Enterprise Security) துறையில் இந்த முதலீடு செய்யப்படும்.

    18. இசட்எல் டெக்னலாஜி (ZL Technologies) நிறுவனம் 42 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 100 பேருக்கு வேலை கிடைக்கும். தகவல் நிர்வாகம் மற்றும் தனியுரிமை (Information governance and privacy) தொடர்பாக இந்த முதலீடு செய்யப்படும்.

    19. ரைப். ஐஓ (Ripe.io) நிறுவனம் 21 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 50 பேருக்கு வேலை கிடைக்கும். உணவுத்துறையில் பிளாக்செயின்(Blockchain) எனப்படும் ஆவணப்படுத்தும் தொழில்நுட்பத்தில் தொடர்பாக இந்த முதலீடு செய்யப்படும்.

    20. கேல்டான் பயோடெக் (Caldon Biotech) நிறுவனம் 70 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 75 பேருக்கு வேலை கிடைக்கும். மருந்துகளை கண்டறியும் கிளினிக்கல் டயக்னோசிஸ் (Clinical Diagnostics) தொடர்பாக இந்த முதலீடு செய்யப்படும்.

    21. லிங்கன் எலக்ட்ரானிக் (Lincoln Electric) நிறுவனம் 16 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 80 பேருக்கு வேலை கிடைக்கும். வெல்டிங் வயர் மற்றும் நுகர்பொருள் (Welding wires & Consumables) தொடர்பாக இந்த முதலீடு செய்யப்படும்.

    22. வேரபில் மெம்ஸ் (Waerable Mems) நிறுவனம் 1500 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 1500 பேருக்கு வேலை கிடைக்கும். ஐஓடி மற்றும் ஆட்டோனாமஸ் (IOT/Autonomous) தொடர்பாக இந்த முதலீடு செய்யப்படும்.

    23. க்லவுட் லேர்ன் (Kloud Learn) நிறுவனம் 7 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 80 பேருக்கு வேலை கிடைக்கும். ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் ( Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் இந்த முதலீடு செய்யப்படும்.

    24. சியெர்ரா ஹெல்த் ஆர்ட்ஸ் (Sierra Health alerts) நிறுவனம் 50 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 500 பேருக்கு வேலை கிடைக்கும். ஐஓடி மற்றும் ஆண்ட்ராய்டு மூலம் கேன்சர் சிகிச்சை செய்ய ( IOT /Android in Cancer treatment) இந்த முதலீடு பயன்படுத்தப்படும்.

    25. ஏசிஎஸ் குளோபல் டேக் சொலியுஷன் (Acs Global Tech Solutions) நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 1000 பேருக்கு வேலை கிடைக்கும். ஐஓடி மற்றும் ஆவணப்படுத்தும் துறையான பிளாக்செயின் ( IOT/ Block Chain) ஆகியவற்றில் இந்த முதலீடு பயன்படுத்தப்படும்.

    26. டாட்சால்வ்ட் சிஸ்டம்ஸ், ஐஎன்சி (Dotsolved Systems, Inc) நிறுவனம் 21 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 150 பேருக்கு வேலை கிடைக்கும். தொழில்நுட்ப சேவை ( Technology Services) துறையில் இந்த முதலீடு பயன்படுத்தப்படும்.

    27. இண்டி ஹோட்டல்ஸ் (Indy Hotels) நிறுவனம் 300 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 1300 பேருக்கு வேலை கிடைக்கும்.

    28. லேட்டன்ட் ஏஐ (Latent.ai) நிறுவனம் 21 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 50 பேருக்கு வேலை கிடைக்கும். எட்ஜ் கம்பியூட்டிங் துறையில் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் ( Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு வசதியை பயன்படுத்த இது பயன்படுத்தப்படும்.

    29. ஏசிரேயம் (Achireum) நிறுவனம் 50 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 700 பேருக்கு வேலை கிடைக்கும். இயற்கை சுற்றுசூழல் துறை மற்றும் பாரம்பரிய சுற்றுசூழல் ( Artificial Intelligence) தொடர்பாக தொடங்கப்படும் தொழில்முனைவு ஸ்டார்ட் அப்களில் இந்த முதலீடு செய்யப்படும்.

    30. நேச்சர் மில்ஸ் (Nature Mills) நிறுவனம் 36 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 800 பேருக்கு வேலை கிடைக்கும். இயற்கை உணவுகளை உருவாக்குவதில் (Natural Food products) இந்த முதலீடு செய்யப்படும்.

    31. சாய் (SAI) நிறுவனம் 35 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 150 பேருக்கு வேலை கிடைக்கும். இதன் மூலம் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு வசதி மற்றும் பிளாக் செயின் ஆராய்ச்சிகளில் ( Artificial Intelligence & Block Chain) முதலீடு செய்யப்படும்.

    சான்பிரான்சிஸ்கோவில் செய்யப்பட்ட இந்த முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 2,305 கோடி ரூபாய் ஆகும். மொத்தமாக இதன் மூலம் 6,560 பேருக்கு வேலை கிடைக்கும்.

    அமெரிக்கா - சான்பிரான்சிஸ்கோவில் செய்யப்பட்ட நிர்வாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:

    32. டிஐஇ குளோபல் மற்றும் எல்காட் (TiE Global and Elcot) ஒப்பந்தம் ஐடி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.

    33. யுஎஸ்ஐஎஸ்பிஎப் (USISPF) புதிய ஐடி தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்படும்.

    34. கூகுள் எக்ஸ் மற்றும் டான்பிநெட் (Google X and TANFINET) ஒப்பந்தம் ஐடி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.

    35. டிசிஎப் வென்ச்சர்ஸ் (DCF Ventures) ஒப்பந்தம் ஐடி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் செய்யப்பட்ட முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:

    36. டிபி வேர்ல்ட் - இண்டிகிரேடட் சென்னை பிசினஸ் பார்க் (ஐ)பி பிரைவேட்டட் லிமிட்டட் நிறுவனம் 1000 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 1100 பேருக்கு வேலை கிடைக்கும். இதன் மூலம் இலவச வர்த்தக கிடங்கு மண்டலம் எனப்படும் Free Trade Warehousing Zone பகுதிகளில் முதலீடு செய்யப்படும்.

    37. கெயின்ட் இண்டஸ்ட்ரீஸ் (Giant Industries) நிறுவனம் 2000 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 1100 பேருக்கு வேலை கிடைக்கும். இதன் மூலம் பயோ டீசல் (Bio Diesel) முதலீடு செய்யப்படும்.

    38. இந்தியா டிரேட் மற்றும் எக்ஸிபிஷன் சென்டர் (India Trade & Exhibition Centre) மூலம் தமிழகத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் 1000 பேருக்கு வேலை கிடைக்கும். இதன் மனித திறன் தேர்வில் (Manpower hiring) முதலீடு செய்யப்படும்.

    39. பிரைம் ஹெல்த்கேர் குருப் (Prime Healthcare Group) மூலம் 500 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 1500 பேருக்கு வேலை கிடைக்கும். இதன் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் கிளினிக் (Multi-speciality hospitals and clinics) துறைகளில் முதலீடு செய்யப்படும்.

    40. புரோ குளோபல் லாஜிஸ்டிக்ஸ் (Pro Global Logistics) நிறுவனம் மூலம் 150 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 1100 பேருக்கு வேலை கிடைக்கும். இதனால் ஆக்ரோ மற்றும் உணவு துறையில் (Agro and food logistics) முதலீடு செய்யப்படும்.

    41. கேஎம்சி குரூப், துபாய் மற்றும் மவ்டோ எலக்டிரிக் மொபிலிட்டி (KMC Group, Dubai &
    Mauto Electric Mobility) நிறுவனம் மூலம் 100 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்கிறது. இதன் மூலம் 5000 பேருக்கு வேலை கிடைக்கும். இதன் மூலம்எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்சாவில் (E-auto rickshaws) முதலீடு செய்யப்படும்.

    துபாயில் செய்யப்பட்ட முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 3750 கோடி ரூபாய் முதலீடு தமிழகத்திற்கு கிடைக்கும். அதேபோல் 10800 பேர் இதனால் வேலை வாய்ப்பை பெறுவார்கள்.

    மொத்தமாக இந்த 41 ஒப்பந்தங்கள் மூலம் 8835 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 35520 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். தமிழகத்தில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகளில் இந்த 41 ஒப்பந்தங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் தமிழக முதல்வர் இதற்காக உயர்மட்ட கமிட்டி ஒன்றை தற்போது உருவாக்கி இருக்கிறார். வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்தில் எளிதாக செய்யவும், இதற்கான அனுமதிகளை உடனடியாக ஒரே கட்டத்தில் வழங்கிடவும், பணிகளை துரிதப்படுத்தவும் இந்த கமிட்டி உதவும்.

    இந்த கமிட்டியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மின்சார துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர், சிறப்பு திட்டங்கள் துறை அமைச்சர், தொழில்துறை அமைச்சர், சுற்றுசூழல் மற்றும் வருவாய் துறை அமைச்சர், தகவல் தொடர்துறை அமைச்சர், மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்று இருக்கிறார்கள்.

    இந்த குழுவில் தலைமைச் செயலாளர் மற்றும் மற்ற செயலாளர்கள் இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் மாதம் ஒருமுறை சந்திப்பு கூட்டம் நடத்துவார்கள். இதில், வெளிநாட்டு முதலீட்டுக்கு தடையாக இருக்கும் விஷயங்கள், வழக்குகள், சிக்கல்கள் குறித்து விசாரித்து உடனடியாக முதலீடுகளை மேற்கொள்ள வழி செய்வார்கள். இதன் மூலம் முதலீடுகள் வேகம் பிடிக்கும்.

    தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் பழனிச்சாமி முன்னெடுத்து இருக்கும் இந்த செயல்திட்டம் பெரிய பலன் அளிக்க போவது குறிப்பிடத்தக்கது.

     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X