திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருச்சியிலிருந்து 3ஆவது கட்டமாக 179 பேர் மலேசியாவுக்கு சென்ற சுற்றுலா பயணிகள்

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சியில் தவித்த மலேசிய சுற்றுலாப் பயணிகள், 3-வதுகட்டமாக 179 போ் சிறப்பு விமானம் மூலம் நேற்று தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

Recommended Video

    கொரோனா பாதிப்பு... தமிழகத்தில் இருக்கும் ஒற்றுமை

    மலேசியத் தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு சுற்றுலா வந்த 700-க்கும் மேற்பட்டோா் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து மலேசியா திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

    179 Malaysian tourists sent to their country from Trichy

    இதைத் தொடா்ந்து சிறப்பு விமானங்கள் மூலம் அவா்களை மலேசியாவிற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டு வந்தது. இந்த பயணிகளை மூன்று சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து செல்லப்படும் என மலேசிய தூதரகம் அறிவித்திருந்தது.

    அதன்படி கடந்த 1-ஆம் தேதி இரவு முதல் கட்டமாக 179 பயணிகளும், இரண்டாம் கட்டமாக 2-ஆம் தேதி காலை 181 பயணிகளும் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தொடா்ந்து மூன்றாம் கட்டமாக சனிக்கிழமை காலை வந்த சிறப்பு விமானத்தில் 179 பயணிகள் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

     திருச்சி: ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றிய 18,537 பேர் மீது வழக்கு.. காவல் துறை எஸ்பி தகவல் திருச்சி: ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றிய 18,537 பேர் மீது வழக்கு.. காவல் துறை எஸ்பி தகவல்

    இதைத் தொடா்ந்து அடுத்தடுத்த நாள்களில் மலேசியாவில் இருந்து சிறப்பு விமானம் இயக்கப்படாததால் திருச்சியில் மீதமுள்ள 124 பயணிகள் தாயகம் திரும்புவதில் சிக்கல் நீடித்தது. இதையடுத்து இவா்கள் அனைவரும் சிறப்பு பேருந்து மூலம் சென்னை அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை செல்லும் சிறப்பு விமானத்தில் செல்ல அறிவுறுத்தப்பட்டது.

    அப்போது சில பயணிகள் இந்தியாவிலேயே இருப்பதாக தெரிவித்ததைத் தொடா்ந்து 78 போ் சிறப்பு பேருந்தில் சென்னை சென்றனா். அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை மலேசியா செல்லும் சிறப்பு விமானத்தில் அவா்கள் அழைத்து செல்லப்பட்டார்கள் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

    English summary
    Tourists from Malaysia has been sent to their country by special flight from Trichy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X