திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த கருவியை முன்பே பயன்படுத்தியிருந்தால்.. இந்நேரம் சுஜித் வெளியில் வந்திருக்கலாமோ?

சுஜித்தை மீட்க வெங்கடேஷ் குழு உருவாக்கிய கருவி தாமதமாக பயன்படுத்தப்பட்டதாக சலசலப்பு எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Why rescuing Sujith from the borewell takes more time?

    திருச்சி: நாமக்கல் வெங்கடேஷ் குழுவினர் உருவாக்கிய கருவியை முன்பே பயன்படுத்தியிருந்தால் ஒருவேளை சுஜீத்தை இந்நேரம் பத்திரமாக மீட்டிருக்க முடியுமோ என்ற ஆதங்கமும், கேள்வியும் மக்களிடம் எழுந்துள்ளது.

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 2 வயது சிறுவன் சுஜித் 70 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ளான். அவனது நிலைமை என்ன என்று தெரியவில்லை.

    நேற்று மாலை 5. 40 மணியளவில் சிறுவன் போர்வெல் கிணற்றில் விழுந்தான். விழுந்த உடனேயே தகவல் கிடைத்து மீட்புப் படையினர் வந்து விட்டனர். தீயணைப்புப் படையினர், போலீஸார் மற்றும் மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து விட்டனர். அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரும் வந்து விட்டனர். மாவட்ட கலெக்டர்,எஸ்பி என சகலரும் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர்.

    உயிருக்கு போராடும் சுஜித்.. பயன்படாத போர்வெல் கிணறுகளை உடனே மூடுங்கள்.. கலெக்டர்கள் அதிரடி உத்தரவுஉயிருக்கு போராடும் சுஜித்.. பயன்படாத போர்வெல் கிணறுகளை உடனே மூடுங்கள்.. கலெக்டர்கள் அதிரடி உத்தரவு

    தெம்பு கிடைத்தது

    தெம்பு கிடைத்தது

    போர்வெல்லில் அப்போது கிட்டத்தட்ட 26 அடி ஆழத்தில் விழுந்திருந்தான் சுஜித். அவனது குரலை வெளியில் இருந்தோர் தெளிவாக கேட்க முடிந்தது. மேலிருந்து பேசியோர் பேச்சும் சிறுவனுக்கு கேட்டு அதற்கு அவன் ரியாக்ஷனும் கொடுத்தான். இதனால் அனைவருக்கும் தெம்பு கிடைத்தது. மீட்டு விட முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

    மணிகண்டன்

    மணிகண்டன்

    முதலில் மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் கண்டுபிடித்த கருவி மூலம் மீட்கும் முயற்சிகள் நடந்தன. ஆனால் அவர் உருவாக்கிய ரோபோட் கருவியை சிறுவன் விழுந்திருந்த இடம் வரை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் சிறுவனின் கைகளில் கயிற்றைப் போட்டுக் கட்டி மேலேதூக்கி பின்னர் ரோபோட் கருவி மூலம் மீட்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

    கயிறுகள்

    கயிறுகள்

    இதையடுத்து சிறுவனின் கைககளில் கயிறை மாட்டும் முயற்சிகள் தொடங்கின. ஒரு கையில் மட்டுமே கயிறை கட்ட முடிந்தது. 2வது கையில் கட்டும் முயற்சிகள் அடுத்தடுத்து 3 முறை தோல்வி அடைந்தன. இதற்கே கிட்டத்தட்ட 5 மணி நேரம் வரை ஆகி விட்டது. இந்த நிலையில் ஏற்கனவே கட்டப்பட்ட கையிலிருந்தும் கயிறு ஈரம் காரணமாக கழன்று விட்டது. இதனால் மணிகண்டன் டீமின் முயற்சிகள் தோல்வி அடைந்தன.

    பள்ளம்

    பள்ளம்

    இதற்கிடையே பக்கவாட்டில் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டி அதன் மூலமாக மீட்கும் முயற்சிகள் தொடங்கின. ஆனால் குறிப்பிட்ட ஆழம் வரை தோண்டிய பின்னர் பாறை வந்ததால் அந்த முயற்சியும் நின்று போனது. இப்படியாக மாறி மாறி என்னென்னவோ செய்து பார்த்தனர். இந்த நிலையில்தான் வெங்கடேஷ் என்பவர் உருவாக்கிய கருவியைக் கொண்டு வந்தனர்.

    மீட்பு கருவி

    மீட்பு கருவி

    இது வெங்கடேஷ் என்பவர் தலைமையில் உருவாக்கிய மீட்புக் கருவி. இதைப் பரிசோதித்து சென்னை ஐஐடி அங்கீகாரம் கொடுத்துள்ளது. இது ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் ஆகும். அதை அப்படியே வித்தியாசமாக மீட்புக் கருவியாக மாற்றியுள்ளனர். அதன்படி ஆக்சிஜன் சிலிண்டருடன், ஒரு கேமரா இணைக்கப்பட்டுள்ளது. மைக் இணைக்கப்பட்டுள்ளது. அது போக குழந்தைகளை அப்படியே தூக்கிப் பிடித்து மேலே கொண்டு வர வசதியாக ஒரு ஹூக்கும் இணைக்கப்பட்டுள்ளது.

    பெரும் சோகம்

    பெரும் சோகம்

    மேலிருந்து இதை கீழே இறக்கும்போது உள்ளே உள்ள நிலவரத்தை வெளியில் இருந்து பார்க்க முடியும். அதற்கேற்ப செயல்பட முடியும்.. நேற்றைய மீட்பு சாதனங்களிலேயே இதுதான் சற்று சிறப்பாக இருந்தது. ஆனால் இந்த கருவியை நேற்று பயன்படுத்தியபோது 26 அடி ஆழத்தில் சிறுவன் இல்லை. அப்போதே அவன் வெகுவாக கீழே இறங்கி விட்டான். இதுதான் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி விட்டது.

    ஆதங்கம் - ஆவேசம்

    ஆதங்கம் - ஆவேசம்

    இந்த கருவியை முன்கூட்டியே பயன்படுத்தியிருந்தால், அதாவது 26 அடி ஆழத்தில் சற்று பாதுகாப்பான சூழலில் சிறுவன் இருந்தபோதே பயன்படுத்தியிருந்தால் இந்நேரம் சுஜித்தை மீட்டுக்கொண்டு வந்திருக்கலாமோ என்ற ஆதங்கமும், கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் தாமதங்கள் தவிர்க்கப்பட வேண்டியது மிகமிக அவசியம் என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    பொறுத்திருப்போம்.. சுஜித் நலமுடன் திரும்ப வேண்டும் என்று அனைவரும் பிரார்த்திருப்போம்.

    English summary
    2 year old boy sujith rescue operation: The public says the boy could be rescued if the venkatesan's new tool was used
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X