• search
திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

Year Ender 2019: "அம்மா இருக்கிறேன் சாமி.. கவலைப்படாதே.. "உம்..ம்மா".. மறக்க முடியாத சுஜித்!

|
  தாயின் பாச போராட்டம் ..கண்ணீர் விட்ட மக்கள்!

  மணப்பாறை: இந்த வருடம் நாட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவன் சுஜித் என்பதை மறந்துவிட முடியாது.. இந்த வருடம் என்றில்லை.. எத்தனை காலம் ஆனாலும் சுஜித்தின் முகம் நம் மனதை விட்டு மறையாது!

  மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டி பகுதியில் வேளாங்கண்ணி என்பவருக்கு சொந்தமான சோளக்காட்டில் 500 அடி ஆழ கிணற்றில்தான் மேரியின் குழந்தை சுஜித் விழுந்துவிட்டான்.

  குழந்தை 26 அடி பள்ளத்தில்தான் முதலில் இருந்தான்.. இதன்பிறகுதான் அவன் 70 அடிக்கு போய் விழுந்துவிட்டான்.. தேசிய பேரிடர் மீட்பு முதல் தனிநபர் உதவி வரை எல்லோருமே சுஜித்தை மீட்க திரண்டு வந்தனர்.

  பிளாஷ் பேக் 2019

  மேரி

  மேரி

  அன்றைய நாள் சுஜித்திற்கு உற்சாகமூட்டும் வகையில், சுஜித்தின் தாய் மற்றும் தந்தை ஆகியோரை வைத்து பேச வைத்தனர் அதிகாரிகள். சுஜித் தாய் மேரி, "அம்மா இருக்கிறேன் கவலைப்படாதே" என்று கூறியதற்கு "உம்" என்று சுஜித் பதிலளித்துள்ளார். எனவே, சுஜித் மயக்க நிலைக்கு செல்லவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.

  பலூன் முறை

  பலூன் முறை

  இதற்காக நிறைய வழிமுறைகளும் கையாளப்பட்டன.. முதலில் பலூன் முறையை பயன்படுத்த முயற்சி நடந்தது. கவ்வி காப்பாற்ற முடியாத அளவிற்கு சுஜித் குழிக்குள் சிக்கியிருந்தான்.. அதனால் போடப்பட்ட துளை நான்கரை இன்ச்தான்.. இந்த நான்கரை இன்ச் குழியில், பலூனை செலுத்தகூட இடம் இல்லை என்றார்கள். பலூன் முறை கை கொடுக்காத காரணத்தினால், ரிக் மிஷின் கொண்டு துளையிடப்பட்டது. டங்ஸ்டன் கார்பைடு இயந்திரம்தான் இந்த குழியை போட பயன்படுத்தப்பட்டது.

  ஆழ்துளை கிணறு

  ஆழ்துளை கிணறு

  அதேபோல, பாறையை அப்படியே துளைத்து எடுத்தாலும் பக்கத்தில் உள்ள ஆழ்துளை கிணறு நொறுங்கிவிடும். எல் அண்ட் டி நிறுவனத்தின் ஜெர்மன் மெஷினை கொண்டுதான் துளை போடும் பணி துவங்கியது. ஆனால் புதிதாக குழி தோண்டப்படும்போது அதிர்வு ஏற்பட்டு கிணற்றுக்குள் நெருப்பு பற்றி கொள்ளும் அபாயம் உள்ளது என்பதாலும் குழந்தையின் மீதும் ஒரு அங்குல மண் இருந்ததாலும், ஜாக்கிரதையாகவே துளையிடும் பணி நடந்தது.

  இரும்பு பற்கள்

  இரும்பு பற்கள்

  ரிக் மெஷின் என்பது அதி தொழில்நுட்பம் வாய்ந்தது.. ஆனால், மணப்பாறை பாறைகளோ கடினமாக இருப்பதால், இந்த மிஷினே அடிக்கடி பழுதானது. இந்த மிஷினை வைத்து பாறைகளை உடைத்து நொறுக்கும்போது, இதன் பற்கள் பாறைக்கு எதிர்திசையில் திரும்பி விட்டன... எல்லாமே இரும்பு பற்கள் என்றதாலும் உடைந்து விழுந்தன. நடுநடுவே கோளாறும் ஏற்பட்டு, அதை சரி செய்து பள்ளம் நோண்டும் பணி நடந்தது.

  பாறைகள்

  பாறைகள்

  இன்னொரு பக்கம் போர்வெல் மூலமாக பாறைகளை உடைக்க திட்டமிடப்பட்டு, அந்த வேலையும் நடந்தது.. இதைதவிர, மெரைன் வீரர்கள் அதாவது கடலுக்கு அடியில் செல்லும் வீரர்களும் தேர்வு செய்யப்பட்டனர். தூத்துக்குடியில் இருந்து இந்த நீச்சல் வீரர்கள் வந்தனர். நடுநடுவே மழையும் பெய்து வந்தாலும் அதையெல்லாம் வீரர்கள் பொருட்படுத்தாமல் மீட்பு பணியில் இறங்கினர். ஆகாஷ், ரிக், பலூன்.. முயற்சிகளுக்கு இடையே.. கொட்டும் மழையிலும்.. வீரர்கள் கனத்த இதயத்துடன் சுஜித்தை மீட்க போராடியும் அது பெரும் தோல்வியில்தான் முடிந்தது.

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  2019 Year Ender stories: 2 year old boy sujith died near manapparai and public shocked
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X