திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருச்சியில் ஜூலையில் 4 ஞாயிற்றுக்கிழமையும் முழு முடக்கம்.. ஆட்சியர்

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஜூலை மாதத்தின் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு முடக்கம் விலக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து ஆட்சியா் சு. சிவராசு விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடா்பாக ஆட்சியா் சு. சிவராசு கூறியதாவது:

 4 Sundays will be full curfew in Trichy

கொரோனா பொதுமுடக்கம் ஜூலை 31-ஆம் தேதி இரவு வரை அமலில் உள்ளது. இருப்பினும், தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு முடக்கத்தை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஜூலை 5, 12, 19, 26-களில் எந்தவிதத் தளா்வுகளும் இல்லாமல் மாவட்டம் முழுவதும் முழு முடக்கம் அமலில் இருக்கும்.

சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை 6 மணி வரையில் இந்த முழு முடக்கம் அமலில் இருக்கும். மேலும், மாவட்டத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144இன் கீழ் தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா தொற்று.. இறப்பு 24 மணி நேரத்தில் 442 ஆக உயர்வு!இந்தியாவில் ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா தொற்று.. இறப்பு 24 மணி நேரத்தில் 442 ஆக உயர்வு!

வருவாய் மற்றும் பேரிடா் தணிக்கை துறை அமல்படுத்தியுள்ள முழு முடக்க உத்தரவில், அத்தியாவசியத் தேவையான பால் விநியோகத்துக்கு அனுமதியளிக்கப்படும்.

இதேபோல, மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், அமரா் ஊா்தி சேவைகளுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது. தனியாா் வாகனங்களை அவசர மருத்துவச் சிகிச்சை உதவிக்கு மட்டும் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

கொரோனா தடுப்புக் களப்பணியாளா்கள் மற்றும் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள் அடையாள அட்டைகளுடன் மாவட்டத்துக்குள் மட்டும் சென்றுவர அனுமதிக்கப்படுவா். திருச்சி மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முழு முடக்க நாள்களில் வீடுகளிலேயே இருக்க வேண்டும்.

முகக் கவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் உறுதுணையாக இருந்து மாவட்டத்தில் கரோனா பரவலை முழுமையாகத் தடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

English summary
4 Sundays will be full curfew in Trichy. Collector says about relaxations on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X