திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா ஊரடங்கு.. மகாராஷ்டிராவிலிருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில் மூலம் வந்த 494 பேர்

Google Oneindia Tamil News

திருச்சி: மகாராஷ்டிரத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் 494 பேர் இன்று காலை திருச்சிக்கு வந்தார்கள்.

மகாராஷ்டிராவில் ஏராளமான தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் அவதியடைந்து வருகிறார்கள். இதையடுத்து 494 பேர் இன்று காலை சிறப்பு ரயில் மூலம் திருச்சி திரும்பினர்.

 494 persons reached Trichy from Maharastra by special trains

இவர்களில், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களைச் சேர்ந்த 469 பேர் மட்டும் அந்தந்த மாவட்டங்களுக்கு 12 அரசுப் பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியரகம் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இவர்களைத் தவிர, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 25 பேர் சேதுராப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி தனிமைப்படுத்துதல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இலவச மின்சாரத்தை தமிழக அரசு விட்டுக்கொடுக்க கூடாது... நெஞ்சுயர்த்தி நிற்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்இலவச மின்சாரத்தை தமிழக அரசு விட்டுக்கொடுக்க கூடாது... நெஞ்சுயர்த்தி நிற்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்

இங்கு கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனைவரும் 14 நாள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக ஆட்சியர் சு. சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.

English summary
494 persons reached Trichy from Maharastra by special trains today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X