திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குழந்தை சுஜித்தை மீட்க ரூ.10 கோடி செலவா.. உண்மையில்லை.. நம்பாதீங்க.. திருச்சி ஆட்சியர் விளக்கம்

Google Oneindia Tamil News

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தை மீட்க ரூ.5 லட்சம் செலவானது என்று திருச்சி ஆட்சியர் சிவராசு விளக்கம் அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மாணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியதாஸ் - கலாமேரி தம்பதியின் இரண்டாவது மகன் சுஜித். கடந்த வெள்ளிக்கிழமை தனது தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.

5 lakhs spent to rescue baby sujith from borewell: Trichy Collector

குழந்தை சுஜித்தை மீட்க வெள்ளிக்கிழமை தொடங்கி செவ்வாய்கிழமை காலை வரை மீட்பு பணி நடந்தது. ஐந்து நாட்கள பிறகு குழந்தை சுஜித்தின் உடலை மட்டுமே மீட்பு குழு மீட்டது.

இந்நிலையில் குழந்தை சுஜித்தை மீட்க ரூ.10 கோடி செலவானதாக சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் வேகமாக பரவி வருகிறது. இது முற்றிலும் உண்மை இல்லை என திருச்சி ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துளள விளக்கத்தில், ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தை மீட்க ரூ.5 லட்சம் தான் செலவானது

தொடர்ந்து பெய்து வரும் கனமழை... மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறைதொடர்ந்து பெய்து வரும் கனமழை... மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

சுஜித் மீட்புப் பணிக்காக ரூ.10 கோடி செலவானதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மையில்லை; மீட்புப்பணிக்காக செலவிட்ட தொகை குறித்து பொய் செய்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். ஒஎன்ஜிசி, என்எல்சி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் செலவுக்கான தொகையை கேட்கவில்லை. 5லட்சம் ரூபாய் பணமும், 5000 லிட்டர் டீசலும் தான் செலவானது என்று தெரிவித்தார்.

English summary
Trichy Collector sivarasu said 5 lakhs spent to rescue baby Sujith, not to spend 10 core, dont belive flase massage
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X