திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி போராட்டத்தில் 5 ஆயிரம் பேர் பங்கேற்போம்.. தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் தீர்மானம்!

Google Oneindia Tamil News

திருச்சி : நவம்பர் 29, 30-ந்தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ள முற்றுகை போராட்டத்தில் 5 ஆயிரம் தமிழக விவசாயிகள் பங்கேற்பார்கள் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விவசாயிகள் வங்கியில் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் வருகிற 29 மற்றும் 30-ந்தேதிகளில் இந்தியா முழுவதும் இருந்து 30 லட்சம் விவசாயிகள் பங்கேற்கும் டெல்லி முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்பது என தீர்மானம் போடப்பட்டுள்ளது.

5 thousand tn farmers to participate in delhi protest

நதிகளை தேசியமயமாக்கி அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும், 60 வயது முடிந்த அனைத்து விவசாயிகளுக்கும் மகன், மகள், பட்டா நிலம் இருந்தாலும் மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவேண்டும், காவிரியில் கர்நாடக வெள்ள நீரை ஒரு மாதத்தில் திறந்து விட்டு விட்டு நடுவர் மன்ற தீர்ப்பில் கூறியவாறு மாதா மாதம் தண்ணீர் கொடுக்காமல் ஏமாற்ற நினைத்தால் மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். விளை பொருட்களுக்கு லாபகரமான விலை இல்லை, மழையும் இல்லை. இந்த நிலையில் விவசாயிகளின் நகை, டிராக்டர் ஆகியவற்றை வங்கிகள் ஏலம் விடுவதை உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும், கொள்ளிடம் பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும், காவிரி, கொள்ளிடத்தில் கூடுதல் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்துவது எனவும் செயற்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

English summary
Ayyakannu's farmers welfare association passed resolution of 5 thousand farmers will participate in Delhi protest which will be on 29th and 30th of this month
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X