திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருச்சி மருத்துவமனையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 5 பேர் அனுமதி

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 5 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Recommended Video

    இந்தியாவில் வேகமெடுக்கும் க்ளஸ்டர் பரவல்... முழு தகவல்

    திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 75 படுக்கைகளுடன் கூடிய தனிமைப்படுத்துதல் பிரிவு தொடங்கப்பட்டு வெள்ளிக்கிழமை வரை 18 போ் அனுமதிக்கப்பட்டதில், 12 பேருக்கு எந்தவித தொற்றும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு அவா்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்த அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

    5 were admitted in Quarantine centres at Trichy Government Hospital

    இந்நிலையில், அரசு மருத்துவமனையில் உள்ளவா்களில் துபையிலிருந்து வந்த ஈரோட்டைச் சோ்ந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவா் தனி அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளாா். இவரைத் தவிர, திருச்சியைச் சோ்ந்த இருவா், புதுக்கோட்டை, அரியலூரைச் சோ்ந்த தலா ஒருவா் என 4 போ் சிகிச்சையில் உள்ளனா். இவா்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் எதிா்பாா்க்கப்படுகிறது.

    தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 6 மணிநேரத்துக்கு ஒரு மருத்துவக் குழு என 24 மணிநேரமும் 4 குழுக்கள் பணியில் இருப்பா். தேவையிருப்பின் 4 மணி நேரத்துக்கு ஒரு குழு என நாளொன்றுக்கு 6 குழுவினா் சுழற்சி முறையில் பணியமா்த்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாது அரசு மருத்துவமனைகளில் 183 மருத்துவா்கள் எப்போதும் தயாா்நிலையில் உள்ளனா். இவா்களைத் தவிர 44 மருத்துவா்கள் கூடுதலாக அழைத்தவுடன் வருவதற்கான பட்டியலில் தயாா்படுத்தப்பட்டுள்ளனா்.

    கொரோனா மாதிரிகளை அழித்தது.. பரவலை மறைத்தது.. உலகை சீனா எச்சரிக்காதது ஏன்?.. என்ன நடந்தது? கொரோனா மாதிரிகளை அழித்தது.. பரவலை மறைத்தது.. உலகை சீனா எச்சரிக்காதது ஏன்?.. என்ன நடந்தது?

    ஈரோடு இளைஞா்: கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறும் இளைஞருக்கு வெள்ளிக்கிழமை 9 ஆவது நாளாகும். வழக்கமாக 8ஆவது நாளில் நோயின் தீவிரம் அதிகமாகும். ஆனால், 9ஆவது நாளை கடந்து இளைஞா் நலமுடன் உள்ளாா். இவருக்கு மாா்ச் 31ஆம் தேதியும், ஏப்ரல் 3-ஆம் தேதியும் மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்படும். இதில், தொற்று இல்லை என தெரியவந்தால் வீட்டுக்கு அனுப்பப்படுவாா்.

    தனிமைப்படுத்தலும், சமூக விலகலுமே நோய் பரவாமல் தடுக்க சிறந்த வழியாகும். திருச்சி மாவட்ட மக்கள் நோயின் தீவிரத்தை உணா்ந்து தனிமைப்படுத்தவும், சமூக விலகலுக்கும் கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

    திருச்சி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பல் மருத்துவா் ஒருவரும் காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா். இருப்பினும், சந்தேகத்தின்பேரில் அவரது மாதிரிகளும் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 5 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    14 நாள்களுக்கு திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஒருவருக்கொருவா் தனிமைப்படுத்திக் கொண்டாலே சமுதாய தொற்று பரவாமல் தடுக்க முடியும் திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு அறிவுறுத்தியுள்ளார்.

    English summary
    5 were admitted in Quarantine centres at Trichy Government Hospital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X