திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவால் பாதிக்கப்பட்ட.. 544 கர்ப்பிணிகளுக்கு வெற்றிகரமாக பிரசவம்..திருச்சி அரசு மருத்துவமனை சாதனை

Google Oneindia Tamil News

திருச்சி: கொரோனா பாதிப்புக்குள்ளான 544 கர்ப்பிணிகளுக்குத் திருச்சி அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாகப் பிரசவம் நடைபெற்றுள்ளது. மேலும், அங்குள்ள மருத்துவர்களின் சிறப்பான நடவடிக்கைகள் காரணமாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகளில் ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தற்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. கொரோனா 2ஆம் அலை முதல் அலையைக் காட்டிலும் தீவிரமாகப் பரவியது.

இந்த 2ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு டெலிவரி சமயத்தில் ஏதேனும் பிரச்சினை வருமா என்று கூட பலரும் அஞ்சினர்.

544 கர்ப்பிணிகள்

544 கர்ப்பிணிகள்

இந்நிலையில், திருச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களில் 544 கர்ப்பிணிகள் கொரோனா பாதிப்புடன் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 154 பேருக்குச் சுகப்பிரசவம் மூலமும் 390 பேருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்துள்ளது. இந்த 544 பிரசவத்தில் ஒரு குழந்தைக்குகூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

பச்சிளம் குழந்தைகள்

பச்சிளம் குழந்தைகள்

பொதுவாகப் பிரசவத்தின்போது தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், மருத்துவர்கள் வெகு ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். இருப்பினும், திருச்சி அரசு மருத்துவர்களின் சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக ஒரு குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

திருச்சி அரசு மருத்துவமனை

திருச்சி அரசு மருத்துவமனை

இதுகுறித்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் டாக்டர் வனிதா கூறுகையில், "தாய்மார்களுக்கு கொரோனா இருந்த போதும் பிறந்த குழந்தைகளுக்குத் தொற்று ஏற்படாமல் மிகுந்த ஜாக்கிரதையாகச் செயல்பட்டுப் பாதுகாத்தோம். இருப்பினும் பார்வையாளர்கள் மூலம் 3 பச்சிளம் குழந்தைகளுக்கு மட்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த 3 குழந்தைகளையும் குணமாக்கிவிட்டோம். இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.

52 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை

52 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை

இது மட்டுமின்றி கொரோனா பரவல் அதிகமாக இருந்த கடந்த 3 மாதங்களில் மட்டும் 52 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளோம். இதில் 11 பச்சிளம் குழந்தைகளும் அடக்கம். அனைத்து குழந்தைகளும் நலமுடன் வீடு திரும்பினர். விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்காக வருபவர்களுக்கு கொரோனா உள்ளதா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு உள்ளனர்.

பாராட்டு

பாராட்டு

மூளையில் ரத்தக் கசிவு, மூளையில் கட்டி, கேன்சர் கட்டி ஆகிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு 3 பேர் காப்பாற்றப்பட்டு உள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஒருவருக்கு கொரோனா பாதிப்பு அதிகளவிலிருந்த நிலையிலும், கல்லீரல் ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது" என்று அவர் கூறினார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 544 கர்ப்பிணிகளுக்கு வெற்றிகரமாக பிசரவம் பார்த்தது மட்டுமின்றி, பச்சிளம் குழந்தைகளில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொண்ட திருச்சி மருத்துவமனையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

English summary
544 pregnant women with corona, had their delivery successful at Trichy Government Hospital. And also not a single one of the newborns were affected by corona due to the special measures taken by the doctors.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X