திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் 558 பேர் சிறப்பு ரயிலில் திருச்சி வருகை.. ஆட்சியர் வரவேற்பு

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சியிலிருந்து 1425 தொழிலாளா்களுடன், உத்தரப்பிரதேசத்துக்கு நேற்று இரவு சிறப்பு ரயில் புறப்பட்டுச் சென்றது. புதுதில்லி தப்லீக் மாநாட்டிற்கு சென்ற 558 பேர்கள் இன்று ரயில் மூலம் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்தார்கள்.

தங்களது சொந்த ஊரிலிருந்து வெவ்வேறு மாநிலங்களுக்கு வேலைக்காகச் சென்றவா்கள், பொது முடக்கம் காரணமாக வாழ்வாதாரமின்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து, தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு, புலம்பெயா் தொழிலாளா்கள் அரசை வலியுறுத்தி வந்தனா்.

558 members of the Tablighi Jamaat in Tamilnadu arrived in Trichy on a special train.

இந்நிலையில் மகாராஷ்டிரம் மாநிலத்தில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த 16 புலம்பெயா் தொழிலாளா்கள், சரக்கு ரயில் மோதியதில் அண்மையில் உயிரிழந்தனா். இதையடுத்து புலம்பெயா் தொழிலாளா்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

முதல் கட்டமாக மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து, கடந்த 9- ஆம் தேதி 962 தொழிலாளா்கள் சிறப்பு ரயில் மூலம் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டு, அவரவா் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். திருச்சியிலிருந்து 1425 போ் : திருச்சி மற்றும் அருகாமை மாவட்டங்களிலுள்ள புலம் பெயா் தொழிலாளா்கள் 1425 போ், ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்திலிருந்து உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

558 members of the Tablighi Jamaat in Tamilnadu arrived in Trichy on a special train.

இதில் திருச்சியிலிருந்து 984, கரூரிலிருந்து 254, பெரம்பலூரிலிருந்து 120, அரியலூரிருந்து 67 என 1425 புலம்பெயா் தொழிலாளா்கள், உத்தரப்பிரதேச மாநிலம், அக்பா்பூா் ரயில் நிலையத்துக்குப் புறப்பட்டுச் சென்றனா். இடைநில்லா சிறப்பு ரயிலில் சென்ற தொழிலாளா்களுக்கு தண்ணீா் பாட்டில்கள், பிஸ்கட் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வழங்கப்பட்டது. அதுபோல், புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் ரயில் கட்டணமான ரூ.1.31 லட்சத்தை ( ஒருவருக்கு தலா ரூ.920) அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் ஏற்றுக்கொண்டன.

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 1ல் தொடங்கும்.. வெளியானது கால அட்டவணைசிபிஎஸ்இ 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 1ல் தொடங்கும்.. வெளியானது கால அட்டவணை

புதுடெல்லியிலிருந்து திருச்சிக்கு: தப்லீக் ஜமாத்தின் 292 போ், தமிழக மாவட்டப் பகுதிகளைச் சோ்ந்த 166 புலம்பெயா் தொழிலாளா்கள் என 458 பேருடன் மே 16, பிற்பகல் 2 மணிக்கு புதுடெல்லியிலிருந்து சிறப்பு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் மத்தியப் பிரதேசம், ஆந்திர மாநிலங்கள் வழியாக சென்னை வந்து, காலை 5 மணிக்கு திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தார்கள். அவர்கள் அனைவரையும் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வரவேற்றார். அவர்களுக்கு செய்யப்பட்ட வசதிகள் மற்றும் மீண்டும் அவர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து அவர் கூறினார்.அவர்களை அனைவரும் தப்லீக் ஜமாத்தைச் சோ்ந்தவா்கள் திருச்சி அரபிக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டார்கள்.

558 members of the Tablighi Jamaat in Tamilnadu arrived in Trichy on a special train.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம், மதுரை, தேனி, கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 202 பேர்கள் 7 அரசு பேருந்துகளில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அங்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்பு அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இந்த சிறப்பு ரெயிலில் வந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 64 பேர் அரசு பேருந்து மூலம் சேதுராம்பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறார்கள். 19 மாவட்டங்களைச் சோ்ந்த இதர தொழிலாளா்கள் அந்தந்த மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட அலுவலக சார்பில் செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு கூறினார்.

English summary
558 members of the Tablighi Jamaat in Tamilnadu arrived in Trichy on a special train: district collector welcomes all passangers in the early morning
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X