திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

70 அடி ஆழ கிணற்றில் அலேக்காக மயங்கி விழுந்த சாந்தா பாட்டி.. கயிறு கட்டி பத்திரமாக மீட்ட வீரர்கள்!

Google Oneindia Tamil News

திருச்சி: 70 அடி ஆழமுள்ள கிணற்றில் 68 வயதான சாந்தா பாட்டி தவறி விழுந்துவிட்டார்.. இவரை கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு திருச்சி பகுதி மக்கள் நன்றி சொல்லி வருகிறார்கள்.

செந்தண்ணீர்புரம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி சாந்தா. இவருக்கு 68 வயது. இவர் வீட்டின் பின்புறம், சுமார் 70 அடி ஆழத்துக்கு ஒரு கிணறு உள்ளது.

68 year old woman slipped into the well near Trichy

கிணற்றின் அருகே உட்கார்ந்து வழக்கம்போல சாந்தா பாட்டி துணியை துவைத்து கொண்டிருந்தார். பிறகு துணிகளை காயப்போட, கிணற்றின் மீது போடப்பட்டு இருந்த பலகையின் மீது ஏறினார்.

அந்த சமயத்தில் அவருக்கு திடீரென தலைசுற்றி விட்டது. இதனால் மயக்கம் வர மாதிரி இருக்கவும், கிணற்றின் மீது இருந்த பலகை மேலேயே உட்கார்ந்து கொண்டார். ஆனால் வெயிட் தாங்காமல் பலகை திடீரென உடைந்துவிடவும், சாந்தா பாட்டி கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.

ஆனால் 10 அடி ஆழத்துக்கு மட்டுமே தண்ணீர் கிணற்றில் இருந்தது. அதனால் இடுப்பளவு தண்ணீரில் நின்றுகொண்டே அலறி கூச்சலிட்டார். இந்த சத்தத்தை கேட்டதும், குடும்பத்தினர் ஓடிவந்து பார்த்து பாட்டியை மீட்க போராடியும் முடியவில்லை. அதனால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களும், கயிறு கட்டி அவரை மேலே பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர்.

உடனடியாக முதலுதவி சிகிச்சையும் தரப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

English summary
68 year old woman slipped into the 70 ft debth well and Firefighters rescued near Trichy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X