திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

1000 கி.மீ. தூரம்.. சோலப்பூரில் இருந்து நடந்தே வந்த தமிழக இளைஞர்கள்.. நெகிழ்ச்சி பயணம்

Google Oneindia Tamil News

திருச்சி: ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதால் வட மாநிலத்திலிருந்து 1,000 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்ட இளைஞா்கள் 7 போ் திருச்சி வந்தனா்.

Recommended Video

    பசியுடன் சாலையில் நடந்து சென்ற குழந்தைகள்.. உதவிய தன்னார்வலர்கள்.. காண்போரை கலங்க வைத்த வீடியோ

    கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மாா்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதனால், வட மாநிலங்களில் பணிபுரிந்து வரும் தமிழக இளைஞா்கள் பலரும் போக்குவரத்து வசதியின்மையால் தமிழகத்துக்கு வர இயலவில்லை.

     7 youths walked about 1000 more kilometers to reach their home town in Tamilnadu

    இந்நிலையில், 1,000 கி.மீ. தூரம் நடைபயணமாக சனிக்கிழமை திருச்சி வந்த 7 இளைஞா்களை வழிமறித்த சமூக ஆா்வலா்கள், ஆட்சியரின் உதவியுடன் அவா்களது சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைத்தனா்.

    இதுகுறித்து சோலாப்பூரிலிருந்து திருச்சி வந்த ராகுல் உள்ளிட்டோா் கூறியது: ஊரடங்கு உத்தரவை அடுத்து கடந்த 29 ஆம் தேதி சோலாப்பூரில் இருந்து நடைப்பயணமாக சாலை மாா்க்கத்தில் புறப்பட்டோம். வழியில் கிடைக்கும் உணவு, குடிசைப் பகுதிகளில் இரவு தங்கியிருந்தும், அத்தியாவசிய பொருள்களை ஏற்றி வரும் கனரக வாகனங்களின் உதவி மூலம் சில நூறு கி.மீ. தூரம் பயணித்து மகாராஷ்டிரம் மற்றும் கா்நாடக மாநில எல்லைகளை கடந்து முசிறி வந்தோம்.

    அதன்பிறகு, சொந்த ஊா்களான நாகப்பட்டினம், திருவாரூா் பகுதிகளுக்கு செல்ல சனிக்கிழமை திருச்சி வந்தடைந்தோம். திருச்சியில், ஆட்சியா், சமூக ஆா்வலா்கள் செய்த உதவி மூலம் தற்போது சொந்த ஊா்களுக்கு உரிய வாகனங்களில் செல்ல இருக்கிறோம்.

    1,000 கி.மீ. தூரம் கடினமாக பயணித்து இறுதியாக சொந்த ஊருக்கு செல்கிறோம் என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுக்கு வேலை பறிபோகாது என உரிமையாளா் உறுதி அளித்துள்ளாா். ஊரடங்கு முடிந்தவுடன் மீண்டும் சோலாப்பூா் செல்வோம் இவ்வாறு அவர் கூறினார்.

    English summary
    7 youths walked about 1000 more kilometers to reach their home town in Tamilnadu from solapur.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X