திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குடிபோதையில் பஸ்சை மறித்து 'குடிமகன்' ரகளை.. தடுக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து!

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி அருகே மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டவர் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்தினார். இதில் இரண்டு பேரும் காயம் அடைந்தனர். திருச்சி மாவட்டம். சோமரசன்பேட்டை அடுத்துள்ள அல்லித்துறை பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார்(45)

இவர் மதுபோதையில் சோமரசன்பேட்டை அடுத்துள்ள சுண்ணாம்புகாரப்பட்டி சாலை நடுவில் மதுபோதையில் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை நிறுத்தி தீ வைத்து கொளுத்தி உள்ளார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்.. யார் இவர்.. இவரது முழு பின்னணி தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்.. யார் இவர்.. இவரது முழு பின்னணி

மதுபோதையில் தகராறு

மதுபோதையில் தகராறு

மேலும் அப்பகுதியில் வந்த பேருந்தை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டார். இதனை கண்ட பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் பற்றி எரிந்த தீயை அனைத்து அவரை சமாதானப்படுத்தினர். ஆனால் அந்த நபர் மதுபோதையில் தான் என்ன செய்கிறோம் என்று அறியாமல் தன்னைத்தானே கத்தியால் கிழித்துக்கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட நின்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது குறித்து சோமரசன்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

கத்தியால் குத்தினார்

கத்தியால் குத்தினார்

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆய்வாளர் கார்த்தி சாந்தகுமாரை பிடிக்க முயன்றார். அப்போது மது போதையில் இருந்த சாந்தகுமார் தனது கையில் வைத்திருந்த கத்தியால் உதவி ஆய்வாளர் கார்த்திகை குத்தி உள்ளார். இதில் கார்த்திக்கு இரண்டு இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் போலீசார் சாந்தகுமாரை மடக்கி பிடித்தனர்.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

பின்னர் சாந்தகுமார் மற்றும் காயமடைந்த உதவி ஆய்வாளர் கார்த்தி இருவரையும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து சோமரசன்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் குடிமகன் செய்த இந்த செயலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் கோரிக்கை

மக்கள் கோரிக்கை

தமிழகத்தில் மதுபோதையில் இதுபோல் தகராறு செய்பவர்களும், கொலை செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் தெருவுக்கு, தெரு டாஸ்மாக் கடைகள் உள்ளதால் உச்சக்கட்ட மதுபோதையில் குடிமகன்கள் பொதுமக்களை அல்லல்படுத்தி வருகின்றனர். எனவே தமிழகத்தில் மதுக்கடைகளை பாதியளவு குறைக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
A drunken rioter near Trichy stabbed a sub-inspector. Two of them were injured. The public has demanded that liquor stores in Tamil Nadu be halved
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X