திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிலத்தகராறில் டீ மாஸ்டர் வெட்டிக்கொலை.. என்ஜினியரிங் மாணவர் கைது

Google Oneindia Tamil News

Recommended Video

    குவைத் ஏர்போர்ட்டில் விமான சக்கரம் ஏறி இந்திய ஊழியர் பலி | நிலத்தகராறில் டீ மாஸ்டர் வெட்டிக்கொலை

    திருச்சி: திருச்சியில் நிலத் தகராறு காரணமாக டீ மாஸ்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருச்சி விமானநிலையம் குளாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மகன் அப்பாவு என்கிற வீரமலை. 47 வயதான இவர் விமானநிலைய பகுதியில் ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக பணியாற்றி வந்தார்.

    A tea Master killed in Trichy on land issue: including Engineering Student arrested

    அப்பாவுவின் தம்பி சந்தானம் என்பவர் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார். பழனியாண்டி என்பவரின் சகோதரர் பொன்னுசாமி. இவர்களும், அதே பகுதியை சேர்ந்த பட்டாபிராமனின் மகன்களான சந்தானம் (45), பாலமுருகன் (21) ஆகியோரும் உறவினர்கள் ஆவார்கள்.

    பழனியாண்டி, பொன்னுசாமி குடும்பத்தினருக்கும், பட்டாபிராமனின் மகன்களுக்கும் இடையே காலி இடம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது.

    "அழாதேம்மா.. நம்ம குழந்தை திரும்ப வந்துடும்".. ஈரோட்டில் சட்டவிரோத குழந்தை விற்பனை.. ஷாக் வீடியோ!

    இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி இரவு அந்த நிலத்தின் அருகே பொன்னுசாமி, பழனியாண்டி மற்றும் அவரது மகன்கள் அப்பாவு, சந்தானம் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அப்போது பட்டாபிராமனின் மகன்கள் சந்தானம், பாலமுருகன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    நிலத்தகராறு தொடர்பாக அபாசமாக பேசியதோடு அப்பாவு, சந்தானம் ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு அவர்கள் தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இல்லாமல் அப்பாவு பரிதாபமாக நேற்று காலை இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த விமானநிலைய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அப்பாவு உடலை அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள விமானநிலையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தானம், பாலமுருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான பாலமுருகன் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சந்தானம் பால் வியாபாரம் செய்து வருகிறார். திருச்சி அரசு மருத்துவமனையில் அப்பாவுவின் உடல் பிரேத பரிசோதனை நடந்த போது அவரது உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு நின்றனர். அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

    முன்னதாக கொலையாளிகளை கைது செய்ய போலீசாரிடம் அங்கிருந்தவர்கள் வலியுறுத்தியதால் பிரேத பரிசோதனைகூடம் முன்பு பரபரப்பாக காணப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்ததும் அப்பாவுவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    English summary
    A tea Master killed in Trichy on land issue: including Engineering Student two persons have been arrested.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X