திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோர்ட் கதவு, ஜன்னல் மூடப்பட்ட நிலையில்.. மாஜிஸ்திரேட்டிடம் முகிலன் ரகசிய வாக்குமூலம்.. 2 மணி நேரம்!

திருச்சி மாஜிஸ்திரேட்டிடம் முகிலன் ரகசிய வாக்குமூலம் அளித்தார்

Google Oneindia Tamil News

திருச்சி: கோர்ட்டு அறையின் கதவு, ஜன்னல்கள் மூடப்பட்ட நிலையில், சுமார் 2 மணி நேரம் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் முகிலன் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளர். அந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் சமூக ஆர்வலருமான முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி சென்னை எக்மோர் ஸ்டேஷனில் மாயமானார். அவரை சிபிசிஐடி போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த 6-ந்தேதி திருப்பதி ரெயில்வே ஸ்டேஷனில் போலீசார் மீட்டு சென்னைக்கு அழைத்து வந்தனர்.

எழும்பூர் சிபிசிஐடி ஆபீசிலும் வைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து கடந்த 9-ந்தேதி நடுராத்திரி கரூர் மாஜிஸ்திரேட் விஜயகார்த்திக் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட முகிலனை, 24-ம் தேதி வரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

தம்பிகளா பட்டா கத்தியை கீழே போடுங்க.. வாங்க மரம் செடி நடலாம்.. விவேக்கின் அன்பு அழைப்பு தம்பிகளா பட்டா கத்தியை கீழே போடுங்க.. வாங்க மரம் செடி நடலாம்.. விவேக்கின் அன்பு அழைப்பு

பாலியல் புகார்

பாலியல் புகார்

இந்த பாலியல் புகாரில் முகிலனை காவலில் எடுத்து விசாரிக்க கரூர் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தார். அது தொடர்பான விசாரணைக்கு முகிலன் கோர்ட்டுக்கு வந்தபோது, சட்டை அணியாமல், வெற்று உடம்புடன் வந்திருந்தார்.

தாக்கினார்கள்

தாக்கினார்கள்

"ஜெயிலில் வைத்து போலீசார் என்னை தாக்கினார்கள் என்று புகார் சொல்லி, "கைது செய், கைது செய், ஜெயிலில் தன்னை தாக்கிய போலீசாரை கைது செய், "ஜெயிலில் வைத்து என்னை கொலை செய்ய அரசு சதி திட்டம் தீட்டுகிறது என்றும் சொன்னார். பின்னர் போலீசார் 3 மணி நேரம் முகிலனிடம் விசாரிக்க நீதிபதி அனுமதி தந்ததன் அடிப்படையில் விசாரணையும் நடத்தப்பட்டது.

சிறை

சிறை

பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் அவரை திருச்சி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று மாலை 3.30 மணி அளவில் போலீசார் திடீரென முகிலனை திருச்சி கோர்ட்டுக்கு அழைத்து வந்து மாஜிஸ்திரேட்டு திருவேணி முன் ஆஜர்படுத்தினார்கள்.

சாப்பாடு

சாப்பாடு

கோர்ட்டு அறைக்குள் வந்ததும் மாஜிஸ்திரேட்டு திருவேணி, முகிலனை ஒரு பெஞ்சில் உட்காரும்படி கூறினார். இதனை தொடர்ந்து அவரிடம் உடல் நலம், குடும்ப சூழல் தொடர்பாக சில கேள்விகள் கேட்டார். சிறையில் நல்ல முறையில் உணவு வழங்கப்படுகிறதா? என்றும் கேட்டார். அதற்கு முகிலன் உணவு நன்றாக வழங்குவதாக பதில் அளித்தார். இதனை தொடர்ந்து ஒரே ஒரு பணியாளரை தவிர மற்ற பணியாளர்கள் மற்றும் வக்கீல்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

ரகசிய வாக்குமூலம்

ரகசிய வாக்குமூலம்

கோர்ட்டு அறையின் கதவு மற்றும் ஜன்னல்கள் மூடப்பட்டன. சுமார் 2 மணி நேரம் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் முகிலன் அளித்த ரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. முகிலனின் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து திருச்சி ஜெயிலர் ரமேஷிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார். கோர்ட்டில் இருந்து முகிலன் வெளியே வந்தபோது, "சிறையில் 22-ந்தேதி நடந்தது என்ன என்பதை நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருக்கிறேன். அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்" என்றார்.

English summary
Activist Mukilan confessed to the Trichy Magistrate for 2 hours and charge of conspiracy to kill in jail
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X