• search
திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஸ்ரீரங்கம், திருச்சியில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அதிமுக அமைச்சர்கள்

|

திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் ஒன்றியம் மேக்குடி ஊராட்சிமற்றும் குமாரவயலூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 2800 நபர்களுக்கு தலா 5 கிலோ அரிசியை அமைச்சர் வளர்மதி வழங்கினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை படி திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் ஒன்றியம் மேக்குடி ஊராட்சியில் செங்குறிச்சி, மேக்குடி, நடுப்பட்டி, ஆலம்பட்டி, குமாரவயலூர் ஊராட்சி முருகன் கோயில், பாரதிநகர், கொத்தட்டை, குறுஞ்சிநகர் ஆகிய பகுதிகளில் உள்ள 2800 குடும்பங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மற்றும் கழக அமைப்புச் செயலாளர் எஸ்.வளர்மதி நேற்று தனது சொந்த நிதியில் இருந்து தலா 5 கிலோ அரிசி தொகுப்பினை வழங்கினார்.

 ADMK Ministers extended their help for poor people

அதேபோல் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் உள்ளடக்கிய வரகநெரி முதல் பால்பண்ணை வரை உள்ள சாலையை புனரமைக்க பணியை நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து தரமான முறையில் சாலை பணிகளை நடைபெறுகிறாதா என்பதை ஆய்வு செய்தார்.

ஆச்சரியம்.. ஆனால் உண்மை.. தொற்றே இல்லாத நாடாக உருவெடுத்த நியூஸிலாந்து.. சூப்பர் ஜெசிந்தா!

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இ.பி.ரோடு பகுதியில் உள்ள ஏழை, எளிய பொதுமக்கள் 500 பேருக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிவாரண தொகுப்பு உதவிகளை வழங்கினார்.

 ADMK Ministers extended their help for poor people

இதில்திருச்சி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே. சி.பரமசிவம், மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் எம்.ஏ. அன்பழகன், எம்ஜிஆர் மன்ற தலைவர் சுரேஷ் குப்தா, வெல்லமண்டி என் ஜவஹர்லால் நேரு வட்ட செயலாளர்கள் அரப்ஷா, கே.டி. தங்கராஜ், கே சி பி ஆனந்த், முத்துக்குமார் சத்திரப்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் நவலூர் குட்டப்பட்டு செல்வம், மேக்குடி முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் தமிழ்செல்வன், சோமரசம்பேட்டை கூட்டுறவு சங்க தலைவர் பொன்.செல்வராஜ், வீரமுத்து, முத்தையன், வீரமணி, எட்டரை குணா, வைரவேல் மேலும் கிளை கழக செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
Ministers Valarmathi and Vellamandi Natarajan helps for the poor families in Trichy and SriRangam.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more