திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.படங்கள் எங்கே? சர்ச்சையில் பெண் எம்.எல்.ஏ...!

Google Oneindia Tamil News

Recommended Video

    admk mla parameswari murugan to publish controversy advertisement

    திருச்சி: மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகன் அளித்திருந்த விளம்பரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் படங்கள் இடம்பெறாதது அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளாக உள்ளது.

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த பரமேஸ்வரி முருகன். சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர் இந்த பரமேஸ்வரி எம்எல்ஏ

    கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அமைச்சர் தங்கமணியின் பரிந்துரையை பெற்று சீட் வாங்கி மண்ணச்சநல்லூரில் வெற்றிபெற்றார்.

    சட்டிக்கருப்பு கோவில்.. 25 ஆடு, 250 கோழி வெட்டி பலி .. பரமேஸ்வரி எம்.எல்.ஏவின் பரபர விருந்து!சட்டிக்கருப்பு கோவில்.. 25 ஆடு, 250 கோழி வெட்டி பலி .. பரமேஸ்வரி எம்.எல்.ஏவின் பரபர விருந்து!

     பரமேஸ்வரிக்கு யோகம்

    பரமேஸ்வரிக்கு யோகம்

    2011-2016 காலகட்டத்தில் அந்த தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த இந்திராகாந்திக்கு ஜெயலலிதா மீண்டும் சீட் வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பரமேஸ்வரிக்கு யோகம் அடித்தது.

     செம வீடு

    செம வீடு

    தெற்கு தத்தமங்கலத்தில் குடியிருந்து வந்த பரமேஸ்வரி முருகன், மண்ணச்சநல்லூர்-எதுமலை சாலையில் புதிய வீடு ஒன்றை பிரம்மாண்டமாக கட்டியுள்ளார். வீடு புதுமனை புகுவிழா நிகழ்ச்சியை கடந்த 2 நாட்களுக்கு முன் வைத்த அவர், திருச்சி மாவட்ட நாளிதழ்களில் விளம்பரம் அளித்திருந்தார்.

     இபிஎஸ், ஓபிஎஸ் பெயர் இல்லை

    இபிஎஸ், ஓபிஎஸ் பெயர் இல்லை

    அதில், தப்பித் தவறி கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரோ புகைப்படமோ போடவில்லை. இதேபோல் ஓ.பி.எஸ். படத்தையும் தவிர்த்து பெயரையும் போடவில்லை.

     அடடா கவனிக்கலையே

    அடடா கவனிக்கலையே

    இது தொடர்பான தகவல் திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பரவ, அவர்கள் உடனடியாக எம்.எல்.ஏ.பரமேஸ்வரி முருகனை தொடர்பு கொண்டு என்ன காரியம் செய்துள்ளீர்கள் என பதற, அவரோ கூலாக அப்படியா நான் கவனிக்கவில்லை. எனது ஆதரவாளர் ராமமூர்த்தி தான் விளம்பரம் கொடுத்தார் விசாரிக்கிறேன் எனச் சொல்லியிருக்கிறார்.

     கமிஷன் கேட்டு சிக்கியவர்

    கமிஷன் கேட்டு சிக்கியவர்

    இதனிடையே, இதே பரமேஸ்வரி முருகன் எம்.எல்.ஏ. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சமயபுரம் கோவிலில் மின்கோபர விளக்கு பணிக்காக ஒப்பந்ததாரரிடம் 30% கமிஷன் கேட்டு சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    admk mla parameswari murugan to publish controversy advertisement
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X