• search
திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நாயுடு - ஸ்டாலின் சந்திப்பு லுல்லுலாய்... பாஜக-திமுக தான் ரகசிய கூட்டாளிங்க... தம்பிதுரை விடாப்பிடி!

Google Oneindia Tamil News

திருச்சி: ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இடையேயான சந்திப்பு வெறும் அரசியல் நாடகம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். நான் ஏற்கனவே சொன்னது போல பாஜக -திமுக இடையே தான் ரகசிய கூட்டணி இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதற்குப் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த தம்பிதுரை கூறியதாவது: தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் தேர்தல் பணியை தொடங்க முடியாது இருப்பினும் மக்களை ஆயத்தப்படுத்துவதற்காக, எங்கள் கழக நண்பர்களை ஊக்குவிக்கும் பணியில் தான் ஈடுபட்டு வருகிறோம்.

தேர்தல் பணி என்பது தேர்தல் நேரத்தில் தான் செய்ய முடியும். இருப்பினும் எந்த சூழ்நிலை வந்தாலும் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

[தங்க தமிழ்ச்செல்வனின் அடேங்கப்பா உண்ணாவிரதம்.. ஆண்டிப்பட்டியே ஆடிப் போய்க் கிடக்கு!]

தமிழிசை சொன்னது சரிதான்

தமிழிசை சொன்னது சரிதான்

தணிக்கை குழு என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. என்னை பொறுத்தவரை தணிக்கை குழு சரியான முறையில் செயல்பட்டிருந்தால் சர்காரில் சர்ச்சைக்குரிய காட்சிகள் வெளிவந்து இருக்காது. இதைத் தான் படம் வெளியாவதற்கு 10 நாட்களுக்கு முன்பே தமிழிசை, படத்தில் நடிப்பவர்கள் எல்லாம் இந்த நாட்டின் முதல்வர் ஆகிவிடலாம் என்று கனவு காண்கிறார்கள். தவறான செய்தியெல்லாம் கொடுத்து மக்களை திசை திருப்ப முயற்சிப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.

சென்சார் போர்டு மேல தான் தப்பு

சென்சார் போர்டு மேல தான் தப்பு

பாஜக தலைவர் ஒருவரே குற்றம் சொல்லும் போது ஆளும் கட்சியின் திட்டங்களை கொச்சை படுத்தும் வகையில் உள்ள காட்சிகளை தணிக்கை குழு ஏன் நீக்கவில்லை என்பது தான் என்னுடைய கேள்வி. இப்போது நீக்கிய காட்சிகளை ஏற்கனவே நீக்கி இருந்தால் பிரச்சனை இருந்திருக்காது. சென்சார் போர்டைத் தான் நான் குற்றம் சாட்டுகின்றேனே தவிர மத்திய அரசை நான் குற்றம் சாட்டவில்லை.

பதில் சொல்கிறோம்

பதில் சொல்கிறோம்

மத்திய அரசின் திட்டங்களை பற்றி சொல்வது என்பது என்னுடைய அனுபவத்தை பற்றி தான் சொல்கிறேன். பாஜக எங்களை குற்றம்சாட்டும் போது நாங்களும் பதில் சொல்ல வேண்டும் என்று தான் குற்றம்சாட்டி வருகிறோம்.

சந்திரபாபு நாயுடுவும் கம்முனு ஆகிடுவார்

சந்திரபாபு நாயுடுவும் கம்முனு ஆகிடுவார்

ஏற்கனவே ஸ்டாலினை சந்தித்த சந்திரசேகரராவ் அமைதியாகி விட்டார். என்ன ஆனார் என்று தெரியவில்லை. இப்போது சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார் அவரும் அமைதியாகி விடுவார். இதெல்லாம் அரசியலில் நடக்கும் நாடகங்கள். ஆனால் உள்ளுக்குள் நடக்கும் அரசியல் என்ன என்பது எங்களுக்கு தெரியும்.

ரகசிய கூட்டாளிங்க

ரகசிய கூட்டாளிங்க

பாஜக - தி.மு.க ரகசிய கூட்டணி என்பது நான் பலமுறை கூறிவரும் நிலையில் அது உண்மையில்லை என்றால் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலினை தெரிவிக்க சொல்லுங்கள் பார்ப்போம். அப்போது அந்த ரகசியம் உடைந்து விடும் என்று கூறியுள்ளார்.

English summary
ADMk MP Thambidurai speaks to reporters at trichy that BJP - DMK is having secret alliance, Chandrababu naidu - Stalin meeting is political drama nothing serious in it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X