திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வேளான் மசோதா நகலை எரித்து போராட்டம்.. ஏராளமானோர் கைது

Google Oneindia Tamil News

திருச்சி: தமிழகத்தின் திருச்சி, சேலம், புதுக்கோட்டை உள்பட பல்வேறு இடங்களில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. இதேபோல் புதுச்சேரியிலும் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.

Recommended Video

    திருச்சியில் வேளாண் மசோதாவை கண்டித்து திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் - வீடியோ

    அண்மையில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளான் மசோதா விவசாயிகளுக்குஎதிராகவும் கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது.

    தமிழகத்திலும் விவசாய அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் வேளான் மசோதாவிற்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இன்று வேளாண் மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.

    வேளாண் மசோதாவை எதிர்த்து...இன்று முதல் 3 நாட்களுக்கு பஞ்சாபில் ரயில் மறியல் போராட்டம்!! வேளாண் மசோதாவை எதிர்த்து...இன்று முதல் 3 நாட்களுக்கு பஞ்சாபில் ரயில் மறியல் போராட்டம்!!

    மத்திய பேருந்து நிலையம்

    மத்திய பேருந்து நிலையம்

    திருச்சியில் தமிழக விவசாயிகள் சங்கம், சமூக நீதி பேரவை, ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு, மக்கள் அதிகாரம், மக்கள் உரிமை மீட்பு இயக்கம், தமிழ் தேசிய பேரியக்கம் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் தமிழக விவசாய சங்க தலைவர் சின்னத்துரை தலைமையில் நடைபெற்றது.

    போலீஸ் தள்ளுமுள்ளு

    போலீஸ் தள்ளுமுள்ளு

    விவசாயிகள் வேளாண் மசோதாவை கண்டித்து கோஷம் எழுப்பினர். அதை தொடர்ந்து சட்ட மசோதா நகல்களை தீயில் எரித்தனர். அப்போது போலீசார் தடுக்க முயன்ற போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்த போராட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    எஸ்டிபிஐ கட்சியினர்

    எஸ்டிபிஐ கட்சியினர்

    மத்திய அரசின் வேளாண் திருத்த சட்ட மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி சேலத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் இன்று நகல் கிழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் அப்சர் அலி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    எஸ்டிபிஐ எச்சரிக்கை

    எஸ்டிபிஐ எச்சரிக்கை

    மேலும் லோக்சபாவில் மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் திருத்த சட்ட மசோதாவின் நகலை கிழித்த எஸ்டிபிஐ கட்சியினர் மத்திய அரசு உடனடியாக வேளாண் திருத்த மசோதாக்களை திரும்ப பெற வில்லையெனில் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    தீயிட்டு கொளுத்திய காவிரிக்குழு

    தீயிட்டு கொளுத்திய காவிரிக்குழு

    மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை கிடப்பில் போட கோரியும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் மசோதா நகலை தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்ட மசோதா நகலை தீயிட்டு கொளுத்திய போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அவர்கள் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    பாரத ஸ்டேட் வங்கி முன்பு

    பாரத ஸ்டேட் வங்கி முன்பு

    புதுக்கோட்டையில் எஸ்டிபிஐ கட்சியினர் சட்ட நகலை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் புதுக்கோட்டையில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை சார்பாக எஸ்டிபிஐ கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு சட்ட திருத்தங்களை கிழித்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்ட நகலை கிழித்தபோது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது,

    English summary
    Agricultural bill Copy burning protests took place in various places in Tamil Nadu, including Trichy and Salem. A similar burning protest took place in Puducherry.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X