திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அறந்தாங்கி பாலியல் கொலை.. சிறுமியின் பெற்றோருக்கு எம்பி நவாஸ்கனி ரூ. 1 லட்சம் நிவாரணம்!

Google Oneindia Tamil News

திருச்சி: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அறந்தாங்கி சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, ரூபாய் ஒரு லட்சம் நிவாரண உதவியை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி வழங்கினார்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அறந்தாங்கி சிறுமியின் பெற்றோரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, ரூபாய் ஒரு லட்சம் (1,00,000) நிவாரண உதவியை இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி வழங்கினார்.

Aranthangi rape: MP Navaskani gives Rs 1 Lakh to the victims family

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராம நாகூரான், செல்வி தம்பதிகளின் ஏழு வயது சிறுமி ஜெயபிரியா படுகொலை செய்ததை கண்டித்தும் அந்த பெறறோருக்கு ஆறுதல் கூறியதுடன் ரூபாய் ஒரு லட்சம் நிவாரண உதவியையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் கே,நவாஸ்கனி இன்று வழங்கினார், பின்னர் இந்த சிறுமியின் குடும்பத்திற்கு அனைத்து தேவையான உதவிகளை செய்வதாகவும் மேலும் மத்திய அரசு மூலம் கிடைக்க வேண்டிய உதவிகளை செய்வதாகவும் அவரது குடும்பத்தினரிடம் கூறினார்.

மாஸ்க்கே போடலை.. கேரம் விளையாடிட்டிருக்காங்க.. போய் தடுங்க.. போலீஸுக்கு இன்பார்ம் செய்த ராமதாஸ்!மாஸ்க்கே போடலை.. கேரம் விளையாடிட்டிருக்காங்க.. போய் தடுங்க.. போலீஸுக்கு இன்பார்ம் செய்த ராமதாஸ்!

பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி செய்தியாளரிடம் கூறியதாவது : அதேபோல இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் சார்பில் அவர்கள் குடும்பத்தினருக்கு கட்சி சார்பில் இரங்கலை தெரிவித்தேன்.

இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, ஏம்பல் கிராமத்தைச் சார்ந்த அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, இரத்தக் காயங்களுடன் வறண்ட குளம் ஒன்றில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்து கடும் வேதனையடைந்தேன். சிறுமியை இழந்து வாடும் பெற்றோரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூபாய் ஒரு லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கினேன். என்னுடைய நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் இந்த கொடுங்குற்றம் நடைபெற்றுள்ளது.

Aranthangi rape: MP Navaskani gives Rs 1 Lakh to the victims family

இதற்கு உரிய நீதி பெற்று தரவும், இதுபோன்ற கொடுஞ் செயல்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளியாக அரசு விரைந்து செயல்பட தொடர்ந்தும் வலியுறுத்துவேன் என்ற உறுதியையும் குடும்பத்தினருக்கு தெரிவித்தேன். இக்கொடுங்குற்றத்தைச் செய்த மனிதத் தன்மையற்ற கொடூரர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இதுபோன்ற கொடூரங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் . குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக, வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் கேள்வி எழுப்ப உள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.

இச்சந்திப்பில் திராவிட முன்னேற்றக் கழக ஆவுடையார்கோயில் ஒன்றிய செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தலைவர் அல்ஹாஜ் வி.எஸ். முஹம்மது மைதீன், செயலாளர் ஜே.முஹம்மது அலி ஜின்னா, அறந்தாங்கி ஒன்றிய தலைவர் ஈ.முஹம்மது உசேன், காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஜனாப். பீர் ஷேக் உள்ளிட்ட திராவிட முன்னேற்றக் கழக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

English summary
Aranthangi rape: MP Navaskani gives Rs 1 Lakh to the victims family today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X