திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மிட்டாய் பாபு (எ) முகமது பாபு யார் தெரியுமா.. அர்ஜுன் சம்பத் புது தகவல்.. என்ஐஏ விசாரணை கேட்கிறார்!

என்ஐஏ விசாரணை கேட்கிறார் அர்ஜுன் சம்பத்

Google Oneindia Tamil News

திருச்சி: மிட்டாய் பாபு என்கிற முகமது பாபு யார் தெரியுமா? எந்த இடத்தில் சிஏஏவுக்கு ஆதரவாக நோட்டீஸ் தந்தாரோ, அதே இடத்தில்தான் பாஜக பிரமுகர் விஜயரகு கொல்லப்பட்டுள்ளார்.. இது குடும்ப தகராறு கிடையாது.. இது ஒரு 'லவ் ஜிகாத்' தாக்குதலாக கூட இருக்கலாம். அதனால் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும்" என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் விஜயரகுவை கொன்ற மிட்டாய் பாபு உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி பாலக்கரை பாஜக பிரமுகர் விஜயரகு நேற்று முன்தினம் காந்தி மார்க்கெட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமது பாபு என்ற மிட்டாய் பாபு மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வந்தனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என பாஜகவும் வலியுறுத்தி வந்த நிலையில், மிட்டாய் பாபு உள்ளிட்ட 2 பேரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.

மிட்டாய் பாபு கைது நடவடிக்கைக்கு முன்னதாக, படுகொலை செய்யப்பட்ட விஜயரகு குடும்பத்தினரை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரி திருச்சி கமி‌‌ஷனர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

சாய்னா நேவால் பாஜகவில் இணைந்தார்... தெலுங்கானாவில் புதிய பாய்ச்சலுடன் தயாராகும் பாஜக சாய்னா நேவால் பாஜகவில் இணைந்தார்... தெலுங்கானாவில் புதிய பாய்ச்சலுடன் தயாராகும் பாஜக

 மிட்டாய் பாபு

மிட்டாய் பாபு

பின்னர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசும்போது, "விஜயரகு பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர் மிட்டாய் பாபு என்ற முகமது பாபு ஆவார். அவர் விஜயரகுவின் மகளை பல்வேறு வகையில் தொந்தரவு செய்து, கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தியிருக்கிறார்.

 2 வழக்குகள்

2 வழக்குகள்

இதனை விஜயரகுவின் குடும்பத்தினர் தட்டிக்கேட்டுள்ளனர். அதனால்தான் முகமது பாபு, விஜயரகுவை தாக்கியுள்ளார். இது தொடர்பாக 2 வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன.. பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டு போலீசாரிடம் விஜயரகு குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.. ஆனால் முன்கூட்டியே பாதுகாப்பு வழங்கவில்லை.. ஒருவேளை பாதுகாப்பு வழங்கியிருந்தால், முகமது பாபு மீது போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால், இப்படி ஒரு படுகொலையே நடந்திருக்காது.

 லவ் ஜிகாத்

லவ் ஜிகாத்

சிஏஏவுக்கு ஆதரவாக நோட்டீஸ்களை காந்தி மார்க்கெட்டில் விஜயரகு வினியோகம் செய்திருக்கிறார்... எந்த இடத்தில் மார்க்கெட்டில் வைத்து நோட்டீஸ் வழங்கினாரோ, அதே இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அதனால் இந்த கொலையை குடும்ப தகராறு என திசை திருப்ப வேண்டாம்.. இது ஒரு "லவ் ஜிகாத்" தாக்குதலாக கூட இருக்கலாம்.

ஊடுருவல்

ஊடுருவல்

அதனால் இந்த கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும். தமிழகத்தில் யாரெல்லாம் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார்களோ அந்த அதிமுக, பாஜக நபர்கள் மீது தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது. முஸ்லிம் மத அடிப்படைவாதிகள் ஊடுருவி இருக்கிறார்கள்.. இதற்கு பின்னணியில் முஸ்லிம் மத இயக்கங்கள் உள்ளன" என்று கடுமையாக குற்றஞ்சாட்டினார்.

Take a Poll

English summary
arjun sambath asks for NIA investigation over trichy bjp person vijayaraghu murder case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X