திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலினுக்கு தூக்கத்தில் கூட ரஜினி நினைப்புதான்.. வந்துருவாரோன்னு.. அர்ஜூன் சம்பத் கிண்டல்!

ரஜினி கட்டாயம் அரசியலுக்கு வருகிறார் என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தி திணிப்பு பற்றிய ரஜினிகாந்த் கருத்து | Rajini oppose Hindi Imposition

    திருச்சி: ஸ்டாலினுக்கு தூக்கத்தில்கூட ரஜினி நினைப்புதான்.. நீங்க வேணும்னா பாருங்க.. வர்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி தனித்து போட்டியிடுவார்.. ஸ்டாலினை தோற்கடிப்பார்.. ஆன்மீக அரசியல்தான்" என்று இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

    இதோ, அதோ என்ற ரஜினியின் அரசியல் வருகையை தமிழகமே எதிர்பார்த்து சோர்ந்து போய்விட்ட நிலையில், அடிக்கடி வந்து அதனை நினைவூட்டி போவதில் ஒருவர் அர்ஜூன் சம்பத். நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவாளர் என சொல்லப்படுவர்.

    "எனது கணிப்புப்படி ரஜினி அரசியலுக்கு கண்டிப்பாக வருவார். அவர் அரசியலுக்கு வந்தால் நாங்கள் துணை நிற்போம். மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்குவோம். எங்கள் ஆதரவு அவருக்குத்தான்... அரசியலுக்குள் வருவதற்கு நடிகர் ரஜினிகாந்த் தயங்கிய காலம் மலையேறிவிட்டதாகவும் அடுத்து சிங்கம் போல அவர் சிங்கிளாக அரசிலுக்கு நுழையப் போகிறார்" இப்படியெல்லாம் கடந்த காலங்களிலும், இப்போதும் பேசி வருபவர் அர்ஜுன் சம்பத்.

    ஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா.. பழைய போஸ்டரை எடுத்து வந்து திமுகவை கலாய்க்கும் பாஜக!ஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா.. பழைய போஸ்டரை எடுத்து வந்து திமுகவை கலாய்க்கும் பாஜக!

    ரஜினி

    ரஜினி

    இப்போது மீண்டும் அதே கருத்தை அழுத்தமாக வலியுறுத்தி உள்ளார். ஆனால் இந்த முறை ஸ்டாலினை அட்டாக் செய்து ரஜினியின் அரசியல் வருகையை கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத் சொன்னதாவது:

    இந்தி

    இந்தி

    "தமிழ்நாட்டில் இந்திப் படிக்க விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தக்கூடிய, ஸ்டாலின் மகன் நடத்தக்கூடிய, ஸ்டாலின் மருமகன் நடத்தக்கூடிய ஸ்கூல்களில் இந்தி இருக்கு.

    வியாபாரம்

    வியாபாரம்

    ஸ்கூல் நடத்துறீங்க. உங்க பேரன் பேத்திங்க எல்லாம் இந்தி படிச்சிக்கிறாங்க.. எத்தனை நாளைக்கு தமிழ்லேயே வியாபாரம் பண்ணுவீங்க.. அதை எதிர்த்து நாங்க போராட்டம் நடத்த போறதா சொன்னோம். ஆனா, இதை அறிந்த ஸ்டாலின் பின் வாங்கிவிட்டார்.

    ரஜினி

    ரஜினி

    இந்தி மொழி விஷயத்தில் நடிகர் ரஜினி தெளிவா தன் கருத்தை சொல்லிட்டார். அவர் கட்டாயம் அரசியலுக்கு வர்றாரு.. ஆன்மீக அரசியல்.. வர்ற சட்டமன்ற தேர்தலில் ரஜினி தனித்து போட்டியிடுவார். எங்க கூடவெல்லாம் கூட்டணி வெக்கணும்னு இல்லை.. தனியா நிப்பாரு.. ஆட்சியை பிடிப்பாரு.. ஸ்டாலினை தோற்கடிப்பார்.. அதுக்குதான் திமுகவில "ரஜினி வர்றாரா.. ரஜினி வர்றாரா"ன்னு பயந்துட்டே இருக்காங்க. ஸ்டாலினுக்கு தூக்கத்தில்கூட ரஜினி நினைப்புதான்" என்றார்.

    English summary
    Hindu Makkal Katchi Arjun Sambath says Actor Rajnikanth will definitely enter into the Politics soon
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X