திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாயில் செத்த எலி.. கழுத்தில் கத்தி.. தலைகீழாக தொங்கிய விவசாயிகள்.. அலற விட்ட அய்யாக்கண்ணு!

வாயில் செத்த எலியுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Google Oneindia Tamil News

திருச்சி: செத்த எலியை வாயில் வைத்து கொண்டு, தலைகீழாக தொங்கி கொண்டிருந்த விவசாயிகளை கண்டு திருச்சி மக்கள் கலங்கி போய்விட்டனர்.

அய்யாக்கண்ணு.. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர்.. வித்தியாசமான போராட்டங்களை முன்னெடுப்பதில் அய்யாக்கண்ணுவுக்கு நிகர் யாருமே இல்லை.

Ayyakkannu Protest near Trichy Collectorate

அதற்கு இவரது டெல்லி போராட்டமே சாட்சி.. மண்டை ஓடு, மண் சட்டி, தூக்குக் கயிறு இப்படிப்பட்ட பொருட்களை வைத்துக்கொண்டு போராட்டம் நடத்தி டெல்லியை அசைத்து பார்த்தவர். இந்த போராட்டத்தில் செத்துபோன ஜீவராசிகளும் அடக்கம்.. வாயில் பாம்புக்கறி, எலிக்கறியை வைத்துகூட போராட்டம் நடத்தப்பட்டது.

Ayyakkannu Protest near Trichy Collectorate

இப்போதும் அப்படித்தான் விவசாயிகளுடன் இணைந்து போராட்டத்தை நடத்தி உள்ளார். மேட்டூரில் இருந்து 20,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும், ஏரி மற்றும் குளங்கள் வாய்க்கால்கள் உடனடியாக தூர்வாரி கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.. இது இரண்டும்தான் இவர்களின் கோரிக்கை.

Ayyakkannu Protest near Trichy Collectorate

இதற்காகத்தான், அய்யாக்கண்ணு தனது தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது விவசாயிகள் ஒருசிலர் தங்கள் வாயில் எலிக்கறியை வைத்து கொண்டனர். இன்னும் சிலர் தலைகீழாக நின்று கொண்டனர். மேலும் சிலர், கழுத்தில் கத்தியை வைத்து அறுத்து கொள்வது போன்று நடித்தும்.. என இந்த போராட்டங்கள் வித்தியாசப்பட்டன.

கலெக்டர் ஆபீசுக்கு வந்த பொதுமக்கள், இந்த போராட்டத்துக்கு தங்கள் ஆதரவையும் தெரிவித்தவாறே நகர்ந்து சென்றனர்.

என்கிட்ட தப்பா நடந்துக்கறான்.. சீக்கிரம் வாங்க.. பொய்யான புகார்.. மிரள வைத்த பெண்.. ஷாக் வீடியோஎன்கிட்ட தப்பா நடந்துக்கறான்.. சீக்கிரம் வாங்க.. பொய்யான புகார்.. மிரள வைத்த பெண்.. ஷாக் வீடியோ

English summary
Ayyakkannu protest near Trichy Collectorate with Supporters to provide Water from Mettur Dam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X