திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏன் வெயிலில் கிடந்து போராடறீங்க.. வாங்க போலாம்னு.. ஸ்டாலின், கனிமொழி சொன்னாங்க.. அய்யாக்கண்ணு

தன் மீது அவதூறு பரப்புவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

திருச்சி: "என்னது நான் அமித்ஷா கிட்ட பணம் வாங்கினேனா.. நான் பணம் வாங்கினேன்னு யாரெல்லாம் என்னை பத்தி வதந்தி பரப்புறாங்களோ.. அவங்க மீது நான் கேஸ் போட போறேன்" என்று அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

தேர்தலில் மோடிக்கு எதிராக போட்டியிட போவதாக அய்யாக்கண்ணு தெரிவித்திருந்தார். இதையடுத்து, அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசியபிறகு தன் நிலைப்பாட்டை மாற்றி கொண்டு விட்டதுடன், டெல்லியில் அன்றைக்கு போராட்டம் நடத்த தன்னை தூண்டியதே திமுகவும் காங்கிரசும்தான் என்று ஒரு கருத்தையும் சொன்னார்.

அய்யாக்கண்ணுவின் இந்த அரசியல் ஸ்டண்ட் தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. அய்யாக்கண்ணுவா இப்படி பேசுவது என மக்கள் திகைத்தனர்.

முதல்ல ஓட்டுப் போடணும்.. பிறகு மை பாட்டிலில் விரலை முக்கி எடுக்கணும்.. இது இந்தோனேசியாவில்! முதல்ல ஓட்டுப் போடணும்.. பிறகு மை பாட்டிலில் விரலை முக்கி எடுக்கணும்.. இது இந்தோனேசியாவில்!

அமித்ஷா

அமித்ஷா

இதனால் "அமித்ஷாவிடம் விலைபோய்விட்டார், பெட்டி நிறைய பணம் வாங்கி விட்டார்" என்று அய்யாக்கண்ணுவை கடுமையாகவும் வெளிப்படையாகவும் அப்பட்டமாகவும் இணைய தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இத்தனை கேஸ்களா? உங்கள் தொகுதி எம்.பியின் கேஸ் ஹிஸ்டரி தெரியுமா?

புகார்

புகார்

இதனால் கொதிப்படைந்த அய்யாக்கண்ணு, தன் மீது கேலி, கிண்டல் செய்து அவதூறு பரப்புவர்கள் யார் என கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

டெல்லிக்கு அனுப்பல

டெல்லிக்கு அனுப்பல

இதையடுத்து செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு பேசும்போது, "டெல்லியில் போராட்டம் நடத்தியபோது ஸ்டாலின், கனிமொழி, காங்கிரஸ்காரங்க யாரும் எங்களுக்கு ஒரு பைசா கூட தரல. போராட போ..ன்னு டெல்லிக்கு அனுப்பவில்லை.

வாங்க போலாம்

வாங்க போலாம்

ஆனால் ஏன் இப்படி வெயிலில் கிடந்து போராட்டம் நடத்தறீங்க, வாங்க ஊருக்கு போலாம்னு சொன்னாங்க. ஆனா இப்போ இப்படி ஒரு தவறான தகவல்என்னை பத்தி பரவுது. இதை பத்தி புகார் தந்திருக்கேன். இப்படி வதந்திகளை யார் சமூகவலைதளங்களில் பரப்பிகிறார்களோ அவர்கள் மீதும் மானநஷ்ட வழக்கு போட நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் சொல்லி உள்ளார்.

தனி வழக்கு

தனி வழக்கு

பி.ஆர்.பாண்டியன் எங்களை பற்றி அவதூறாக சொல்லி இருக்கிறார். அவர்மீது தனியாக ஒரு நஷ்டஈடு வழக்கு போட போறோம். நாங்க விவசாயிங்க. எந்த கட்சியும் எங்களுக்கு இல்லை. விரும்பியவர்களுக்கு ஓட்டு போடலாம்னு நாங்க ஒரு தீர்மானமே போட்டிருக்கோம்" என்றார்.

English summary
Ayyakkannu says about Amit Shah and Defamation case will be filed against the rumors
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X