திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒன்லி நைட்தான்.. பகலில் இல்லை.. ஹைடெக் வேனை வைத்து ஆட்டம் காட்டிய கொள்ளையர்கள்

காஸ்ட்லி வேனை வைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளான் முருகன்

Google Oneindia Tamil News

Recommended Video

    திருட்டு முருகன் வாக்குமூலம் ஓட்டையும் போட்டது நான்தான்.. அதான் எனக்கு மட்டும் 12 கிலோ நகை

    திருச்சி: கவுண்டமணி ஒரு படத்துல சொல்லுவாரே.. "ஏம்ப்பா டெம்போவெல்லாம் வெச்சி கடத்தி இருக்காங்களாம்ப்பா" என்று. அது மாதிரியே ஒரு காஸ்ட்லி.. ஹைடெக் வேனை வெச்சி நகை, பணம் கடத்தல், கொள்ளை நடந்துள்ளது! எல்லாம் இந்த திருவாரூர் திருடன் முருகன் செஞ்ச வேலைதான்!

    போன ஜனவரி 28ம் தேதி திருச்சி சமயபுரம் டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை நடந்தது. சுவற்றில் பெரிய ஓட்டை.. குழந்தைகள் அணியும் மாஸ்க்.. சகிதம் உள்ளே புகுந்து 470 சவரன் நகைகள் மற்றும் 19 லட்சம் ரூபாய் கொள்ளை போனது.

    இது சம்பந்தமாக 9 மாசம் திருச்சி போலீசார் எந்தகுளூவும் கிடைக்காமல் திணறி விட்டனர். 4 தனிப்படை அமைக்கப்பட்டு, சுமார் 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஒரு துப்பும் கிடைக்கவில்லை.
    யார் கொள்ளை அடித்தார்களே என்ற தெரியாத நிலையில்தான் லலிதா ஜுவல்லரி கொள்ளை நடந்தது.

    அபார்ஷன் ஆனந்தி இன்னும் அடங்கலை.. ஜாமீனில் வெளிவந்தும் கைவரிசை.. வளைத்து பிடித்த போலீஸ்அபார்ஷன் ஆனந்தி இன்னும் அடங்கலை.. ஜாமீனில் வெளிவந்தும் கைவரிசை.. வளைத்து பிடித்த போலீஸ்

    ஒப்புதல் வாக்குமூலம்

    ஒப்புதல் வாக்குமூலம்

    இவர்களில் 6 பேர் இப்போது கைதாகி உள்ளனர். லலிதா ஜுவல்லரி போலவே பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்தது தாங்கள்தான் என ஒருசேர எல்லாரும் ஒப்பு கொண்டுள்ளனர். அதனால் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை சம்பந்தமான விசாரணையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. அப்போது நிறைய தகவல்களை இந்த கொள்ளையர்கள் அவிழ்த்து விட்டு வருகிறார்கள்.

    கணேசன்

    கணேசன்

    அதன்படி, கொள்ளையில் ஈடுபடும்போது வேனை பயன்படுத்தினார்களாம். இந்த வேன் டிரைவராக இருந்தது கொள்ளையன் கணேசன்தான். ஓட்டை போடுவதில் முருகனுடன் சேர்ந்து இவனுக்கும் தொடர்பு உள்ளது. அந்த வேனை இப்போது போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    கடப்பாறை

    கடப்பாறை

    பார்க்க.. பளபளவென இருக்கிறது அந்த வேன்.. ரொம்பவும் காஸ்ட்லி வேன்.. அதில், கேஸ் சிலிண்டர், எடை போடும் மெஷின் எல்லாமே தயாராக வைத்திருப்பார்களாம். அது மட்டுமில்லை.. கடப்பாறை, கையில் போடும் கிளவுஸ் என திருட்டுக்கு தேவையான பொருட்களை இந்த ஹைடெக் வேனில் வைத்துதான் கொண்டு வருவார்களாம்.

    திருடர்கள்

    திருடர்கள்

    இதெல்லாம் நைட் நேரத்தில் மட்டும்தான்.. பகல் நேரத்தில், சமயநல்லூர், வாடிப்பட்டியில் டூரிஸ்ட் வேன் ஆகிவிடுமாம்.. யாராவது பார்த்தால் இந்த வேனில் வைத்தா இவ்வளவு கொள்ளையும் நடந்தது என்று வாயை பிளப்பார்கள். அப்படி கச்சிதமாக இந்த வேனை பயன்படுத்தி இருக்கிறார்கள் திருவாரூர் திருடர்கள்!

    English summary
    lalitha jewellery theft case issue: trichy police have seized luxury van from thief suresh
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X