திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆத்தங்கரையோரம்.. காட்டுக்குள்ள புதைச்சு வச்ச தங்கம்.. மொத்தம் 12 கிலோ.. அதிர வைத்த முருகன்!

முருகன் புதைத்த தங்கத்தை தோண்டி எடுக்கும் வீடியோ வெளியாகி உள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    Bengaluru police released lalitha jewellery theif murugan video

    திருச்சி: ஆத்தங்கரையோரத்துல.. மண்ணுக்குள்ள.. முருகன் புதைத்து வைத்த தங்க நகைகளை பெங்களூரு போலீசார் தோண்டி எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

    கொள்ளை தொடர்பாக பெங்களூர் போலீசார் சரணடைந்த முருகனிடம் விசாரித்துள்ளனர். அப்போது கொள்ளையடித்ததில் 12 கிலோ தங்கத்தை திருவெறும்பூர் பகுதியில் வேப்பந்தட்டை என்ற இடத்தில் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்ததாக சொல்லவும், கர்நாடக போலீசார் முருகனை அழைத்து கொண்டு குறிப்பிட்ட இடத்துக்கு வந்தனர்.

    அங்கு புதைத்து வைத்திருந்த 12 கிலோ தங்கத்துடன், முருகனை திரும்பவும் பெங்களூருக்கே அழைத்து செல்ல திட்டமிருந்த நிலையில், போலீசார் விரைந்து சென்று அவர்களை மடக்கி பிடித்துவிட்டனர். தற்போது முருகனிடம் விசாரணையும் நடந்து வருகிறது.

    காட்டுப்பகுதி

    காட்டுப்பகுதி

    இந்த நிலையில் பெங்களூரிலும் முருகன் நிறைய கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதால், அந்த வழக்குகளிலும் மீட்கப்பட்டதாக கணக்கு காண்பித்து நகைகளை காட்சிப்படுத்தி ஒரு வீடியோவை கர்நாடக போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    கைவிலங்கு

    கைவிலங்கு

    அந்த வீடியோ, ஒரு காட்டுப்பகுதி போல தெரிகிறது... முருகன் புளூ & புளு டிரஸ் போட்டுள்ளான். கை விலங்கு போட்டுதான் போலீசார் அழைத்து வந்திருக்கிறார்கள். 5, 6 கர்நாடக போலீசார் முருகனை அழைத்து கொண்டு தங்கம் புதைத்து வைத்ததாக சொல்லப்பட்ட இடத்துக்கு வருகிறார்கள்.

    நீல கலர் பை

    நீல கலர் பை

    இந்த மண்ணுக்குள்ளதான் புதைச்சு வெச்சேன் என்று முருகன் அடையாளம் காட்டவும், அந்த குறிப்பிட்ட இடம் தோண்டப்படுகிறது. பிறகு ஒரு நீல கலரில் பெரிய பிளாஸ்டிக் பை தெரிகிறது. அந்த பிளாஸ்டிக் பையில் ஒரு கருப்பு பை வெளியே எடுக்கிறார்கள். அதை முருகன்தான் வாங்கி ஓபன் செய்கிறான்.. பைக்குள்ளிருந்து மஞ்சள் பை வெளியே எடுக்கிறான். அந்த மஞ்சள் பைக்குள் நகைகள் தகதகவென மின்னுகிறது.

    வீடியோ

    வீடியோ

    அதாவது நகையை தோண்டி எடுத்தது கர்நாடக பகுதிதான் என்பதைபோல பெங்களூரு போலீசார் இப்படி காட்சி படுத்தி உள்ளனர். ஏற்கனவே தோண்டி எடுக்கப்பட்ட நகைகள் லலிதா ஜுவல்லரியில் கொள்ளை அடிக்கப்பட்டதுதான் என்பதை உறுதி செய்த பின்னரும், கர்நாடக போலீசாரின் இந்த நடவடிக்கை தமிழகத்துக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

    12 கிலோ நகை

    12 கிலோ நகை

    பொதுவாக, ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு செல்ல வேண்டுமானால், சம்பந்தப்பட்ட மாநில போலீசாருக்கு முன்கூட்டியே தகவல் சொல்ல வேண்டும். அதைகூட கர்நாடக போலீசார் செய்யவில்லை. முருகனை ரகசியமாக கூட்டி, 12 கிலோ நகைகளுடன் பெங்களுருக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.

    கோர்ட்

    கோர்ட்

    இப்போது, இப்படி ஒரு வீடியோவை வெளிடவும் நம் போலீசாருக்கு மேலும் அதிருப்தியை தந்துள்ளது. இதுவரை 6 கிலோ நகைகள் மட்டும்தான் முருகனின் கூட்டாளிகளிடம் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நகைகளை பெரம்பலூரில் பெங்களூர் போலீசார் தோண்டி எடுத்த நகைகளை கோர்ட் மூலம் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    English summary
    karnataka police have released a video and seized 12 kg gold from lalitha jewellery theft gang leader murugan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X