திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜக பிரமுகர் "ஒபியம்" கடத்தினாரா.. பேரதிர்ச்சியில் திருச்சி.. 5 பேரை மடக்கி பிடித்த போலீஸ்!

போதை பொருள் கடத்திய பாஜக நிர்வாகி அதிரடி கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

திருச்சி: என்னது பாஜக பிரமுகர் போதை பொருளை கடத்தினாரா என்ற ஆச்சரியத்தில் உள்ளது திருச்சி மாவட்டம்.. அப்படி காரில் ஒபியம் பவுடரை கடத்தி ஒருவர் போலீசில் சிக்கி கைதாகியும் உள்ளார்!

திருச்சி வழியாக மதுரைக்கு ஒரு காரில் ஒபியம் பவுடர் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. அதனால், திருச்சி போதை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் காமராஜ் தலைமையில் மன்னார்புரம் ரவுண்டானா அருகில் இரவு நேரத்தில் சோதனையை மேற்கொண்டனர்.

அப்போதுதான் அந்த கார் வந்தது.. வழக்கம்போல காரை செக் செய்தபோதுதான், உள்ளே 2 பாட்டில்களில் ஒபியம் பவுடர் இருந்ததை போலீசார் கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை.. செயற்கை சுவாசத்துடன் கவலைக்கிடம்பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை.. செயற்கை சுவாசத்துடன் கவலைக்கிடம்

 மண்ணச்சநல்லூர்

மண்ணச்சநல்லூர்

பெரம்பலூரில் இருந்து இதனை கடத்தி கொண்டு வந்ததாக ரோவர்ஸ் சாலையை சேர்ந்த ருவாண்டோ அடைக்கலராஜ் என்பவரையும் கைது செய்தனர். மேலும், மண்ணச்சநல்லூர் மான்பிடி மங்கலத்தை சேர்ந்த ராஜா என்கிற அத்தடியான், பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ், வெண்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், ஆறுமுகம் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

 ராஜஸ்தான்

ராஜஸ்தான்

அந்த போதைப் பொருளின் எடை ஒரு கிலோ 800 கிராம் ஆகும்.. மதிப்பு சுமார் நான்கரை லட்சம் ரூபாயாகும்.. மதுரைக்கு கடத்தி கொண்டு செல்ல முயன்றபோது திருச்சியில் பிடிபட்டு உள்ளது... இதையெல்லாம் யாருக்காக கடத்தி கொண்டு சென்றார்கள் என்ற விசாரணைதான் நடந்து வருகிறது.. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து இந்த போதையை கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதும் பெரம்பலூரைச் சேர்ந்த பிரகாசம் என்பவர் மூலம் இவர்களுக்கு கிடைத்துள்ளதும் முதல்கட்டமாக தொிய வந்தது.

 அடைக்கலராஜ்

அடைக்கலராஜ்

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான 5 பேரும் ஜெயிலில் உள்ளனர். இதில் முக்கியமான நபர் ருவாண்டோ அடைக்கலராஜ் என்பவர்தான்.. இவர் பெரம்பலூர் மாவட்ட பாஜக துணைத்தலைவர் பொறுப்பில் இருக்கிறார்.. இது மிகுந்த அதிர்ச்சியை தந்து வருகிறது.. இவர் பயன்படுத்திய 2 கார்களில் ஒரு கார், பெரம்பலூரைச் சேர்ந்த சித்த மருத்துவருக்கு சொந்தமானதாம்.

 பாஜக பிரமுகர்

பாஜக பிரமுகர்

காப்பீடு திட்டம் தொடர்பான ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள திருச்சி திருவெறும்பூருக்கு இந்த டாக்டர் வந்திருக்கிறார்.. இவருக்கு பக்கத்து வீட்டில் ருவாண்டோ அடைக்கலராஜ் என்பவர் வசித்து வருகிறாராம்.. அவரை நம்பி காரை தந்தால், அவர் இதில் போதை பொருளை கடத்த பயன்படுத்தி உள்ளது தெரியவந்துள்ளது.

 கடத்தல்

கடத்தல்

பெரம்பலூர் மாவட்ட பாஜக OBC அணி மாநில செயற்குழு உறுப்பினரே, இப்படி போதை பொருள் கடத்திய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. அதுமட்டுமல்ல, இந்த 10 வருஷத்தில் திருச்சியில் அபின் விற்பனையே இல்லாத நிலையில் பாஜக நிர்வாகியின் இந்த கடத்தல் போலீசாருக்கே ஷாக்கை தந்துள்ளது.

English summary
bjp state executive arrested for drug trafficking in trichy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X