திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலூரில் ஜஸ்ட் மிஸ்.. இனி வரும் தேர்தலில் பாஜகதான்.. இவ்வளவு தெம்பாக சொல்கிறாரே வானதி சீனிவாசன்!

இடைத்தேர்தலில் பாஜக கண்டிப்பாக வெற்றி பெறும் என்று வானதி தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

திருச்சி: வேலூரில் ஜஸ்ட் மிஸ்.. ஆனால் வர போற தேர்தலில் பாஜகதான் வெற்றி பெறும் என்று மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நடக்க போகிற 2 தேர்தல் தொகுதிகளுக்கு கட்சிகளில் பலமான போட்டா போட்டி எழுந்து வருகிறது. கூட்டணிக்கு திமுக நாங்குநேரியை ஒதுக்கிவிட்டது.

அதுபோல, அதிமுகவும் கூட்டணியில் உள்ள தங்களுக்கு நாங்குநேரியை தருமா என்ற எதிர்பார்ப்பு பாஜகவிடம் எழுந்து வருவதாக கூறப்படுகிறது. சீட் கேட்பது மட்டுமில்லை.. நயினார் நாகேந்திரன் அல்லது பொன். ராதா.. இவர்களில் ஒருத்தரை அங்கு நிறுத்த வேண்டும் என்றும் அதிமுகவை நெருக்கி வருவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

தாறுமாறாக ஏறும் விலை.. பாட்னாவில் ரூ 8 லட்சம் வெங்காய மூட்டைகள் கொள்ளை.. இத கூடவா திருடுவாங்க!தாறுமாறாக ஏறும் விலை.. பாட்னாவில் ரூ 8 லட்சம் வெங்காய மூட்டைகள் கொள்ளை.. இத கூடவா திருடுவாங்க!

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

இந்த நிலையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு இன்னும் செய்யவில்லை என்று உலவி வரும் யூகங்களுக்கு வானதி சீனிவாசன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திருச்சி உறையூரில் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

பாஜக வெற்றி

பாஜக வெற்றி

அப்போது நடைபெற உள்ள இடைத்தேர்தல் முதல் நிர்மலா சீதாராமன் எடுத்துவரும் பொருளாதார சீர்திருத்தம் வரை குறிப்பிட்டு பேசினார். அப்போது அவர் சொன்னதாவது: "வேலூர் தேர்தலில் நூலிழையில் வெற்றி வாய்ப்பு தவறியது, ஆனால் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் பாஜக கூட்டணி வெற்றியடையும். கண்டிப்பாக மக்கள் அரசுக்கு ஆதரவாக தான் எப்போதும் இருப்பார்கள்.

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு இன்னும் செய்யவில்லை.
கட்சி தலைமை இன்னும் எந்த முடிவு எடுக்கவில்லை. விரைவில் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம். பொருளாதார நடவடிக்கையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கம்பெனிகளுக்கு கார்பரேட் வரி குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக பங்குச்சந்தைகள் உயர்வடைந்துள்ளது.

சிக்கல்

சிக்கல்

காங்கிரஸ் கட்சியினர் விமர்சிக்க தகுதி அற்றவர்கள். ஏனெனில் சிறு குறு பெரு நிறுவனங்களின் வளர்ச்சியை முன்னிறுத்தியே நிதியமைச்சர் செயல்படுகிறார். நேரடியாக துறை சார்ந்தவர்களை அழைத்து பேசி வருகிறார். நடைமுறை சிக்கலை புரிந்துக் கொண்டு மாநில அரசுக்காக மத்திய அரசு செயல்படுகிறது.

திமுக

திமுக

இந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாஜக எந்த இடத்திலும் இந்தியை திணிக்கவில்லை. அதேபோல, பொதுமக்கள் ஆதரவு இல்லை என்பதாலே திமுக அறிவித்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்" என்றார்.

English summary
BJP State Vice President Vanathi Srinivasan says about by elections and praised Finance Minister Nirmala Seetharaman
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X