திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10 பைசா பிரியாணிக்காக.. அதிகாலை 4 மணிக்கே நின்ற கூட்டம்.. காற்றில் பறந்த கொரோனா விதிகள்

Google Oneindia Tamil News

திருச்சி: 10 பைசா பிரியாணிக்காக கொரோனாவை மறந்து சமூக இடைவெளி, முகக்கவசம் இல்லாமல் அதிகாலை 4 மணிக்கு முதல் நின்றும் பிரியாணி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ம் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது, இருப்பினும் தற்போது பிரியாணி மீதான நாட்டம் மக்களிடையே அதிகரித்துள்ளது இதனை விரும்பி உண்பதற்கு தனிக்கூட்டம் உள்ளது.

உலக உணவு தினத்தை சிறப்பிக்கும் வகையில் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பிரியாணி கடையில் 10 பைசாவுக்கு பிரியாணி என்று அறிவிப்பு வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. திருச்சியில் முதன்முறையாக வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பால் இன்று காலை முதல் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஹோட்டல் முன்பு கூடினர்.

இன்று உலக பிரியாணி தினம்.. ஆஹா கடைகளில் அலைமோதும் கூட்டம்.. பாஸ்! பீஸ் பெரிசா வைங்கனு அக்கப்போர்! இன்று உலக பிரியாணி தினம்.. ஆஹா கடைகளில் அலைமோதும் கூட்டம்.. பாஸ்! பீஸ் பெரிசா வைங்கனு அக்கப்போர்!

முண்டியடித்து

முண்டியடித்து

கொரோனா காலம் என்பதனை மறந்தும் மக்கள் முண்டியடித்துக் கொண்டு நீண்ட வரிசையில் பிரியாணிக்காக காத்து நின்றது அவ்வழியாக செல்பவரை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியது. எனினும் அதனையும் பொருட்படுத்தாது பிரியாணியை வாங்கச் செல்ல வேண்டும் என்பதற்காக பத்து பைசா நாணயங்களை கொண்டு வந்து அதனை வழங்கி பெற்றுச் சென்றனர்.

144 தடை உத்தரவு

144 தடை உத்தரவு

முதலில் வரும் 100 பேருக்கு இந்த சலுகை என்பதை தெரியப்படுத்தவும் மக்கள் குவிந்தனர். அதே நேரம் காலை முதல் காத்திருந்தும் பிரியாணி கிடைக்காமல் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு என்றும் பொதுமக்கள் கூடக் கூடாது என அரசு அறிவிப்பு விடுத்திருந்தது.

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

எனினும் இதுபோன்று நிறுவனங்களால் விடப்படும் அறிவிப்புகளை கேட்டு குவிந்த மக்களை கட்டுப்படுத்தவும், அதனை தடுக்கவும் காவல்துறையும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்கு உரியது.

பொதுமக்கள்

பொதுமக்கள்


இதுகுறித்து கடையின் உரிமையாளர் கூறும்போது, பழங்கால நாணயங்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இன்று பிரியாணி உலக தினமான இன்று 10 பைசா கொடுத்தால் பிரியாணி என்று அறிவித்திருந்தோம். நாங்கள் 100 பேருக்குதான் அறிவித்திருந்தோம். ஆனால் இவ்வளவு பொதுமக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

வரிசை

வரிசை

சமூக இடைவெளியுடன் நாங்கள் வரிசையில் இப்படி வைத்திருந்தோம். நேரம் செல்ல செல்ல 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தால் அடுத்த முறை இன்னும் நிறைய பேருக்கு பிரியாணி வழங்க ஏற்பாடு செய்வோம் என தெரிவித்தார்.

English summary
Briyani for 10 paise in Trichy, people gathered in front of the shop
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X