திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாராமரிப்பு பணி.. திருச்சி வழியாக செல்லும் விரைவு ரயில் சேவைகளில் மாற்றம்

Google Oneindia Tamil News

திருச்சி: தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி வழியாக செல்லும் விரைவு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது..

இதுகுறித்து திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுரை ரயில்வே கோட்டப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக, திருச்சி-திருவனந்தபுரம் சென்ட்ரல்-திருச்சி நகரங்களுக்கிடையிலான விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Change in rail services via trichy due to maintenance

இதன்படி திருச்சி-திருவனந்தபுரம் சென்ட்ரல் விரைவு ரயில் (வண்டி எண் 22627), திருவனந்தபுரம் சென்ட்ரல்-திருச்சி விரைவு ரயில்( வண்டி எண் 22628) போக்குவரத்தில், மார்ச் 3 ( செவ்வாய்க்கிழமை) முதல் 10- ஆம் தேதி வரை கோவில்பட்டி- திருவனந்தபுரம் இடையிலான சேவை ரத்து செய்யப்படுகிறது. எனவே, குறிப்பிட்ட நாள்களில் திருச்சியிலிருந்து கோவில்பட்டி வரை மட்டுமே இந்த ரயில்கள் இயக்கப்படும்.இதுபோல், தாம்பரம்-நாகா்கோவில்-தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (வண்டி எண் 16191) சேவை, மார்ச் 9ம்-ஆம் தேதிவரை திண்டுக்கல்-நாகா்கோவில் இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

இதன்காரணமாக, தாம்பரத்திலிருந்து திண்டுக்கல் வரை மட்டும் இந்த ரயில் இயக்கப்படும்.நாகா்கோவில்-தாம்பரம் (வண்டி எண் 16192) விரைவு ரயில், மார்ச் 3- ஆம் தேதி முதல் 10- ஆம் தேதி வரை நாகா்கோவிலிலிருந்து திண்டுக்கல் வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இதனால், திண்டுக்கல்லிருந்து தாம்பரம் வரை மட்டுமே இந்த இயக்கப்படும். பராமரிப்புப் பணிகள் முடிந்த பின்னா், இந்த ரயில்களின் சேவை வழக்கம்போல இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Change in rail services next one week via trichy due to maintanace
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X