• search
திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

டெய்லி "பார்க்கணும்".. இல்லாட்டி பைத்தியம் பிடிச்சுடுமாம்.. முத்திபோன அல்போன்ஸ்.. யார் அந்த 15 பேர்?

|

திருச்சி: ஆபாச படம் பார்க்காமல் அல்போன்ஸால் இருக்கவே முடியாதாம்.. இதையே பார்த்து பார்த்து.. மன நோயாளி போலவே ஆகிவிட்டாராம்.. ஆபாச வீடியோக்களை டாக்டர்கள், தொழிலதிபர்கள் என 15 பேருக்கும் அல்போன்ஸ் ஷேர் செய்துள்ளார்.. அதனால் அவர்களும் கைதாகலாம் என்பதால் பெரும் பரபரப்பு இந்த வழக்கில் தொற்றி கொண்டுள்ளது.

மாநிலத்திலேயே முதல் முறையாக சிறுமிகள் ஆபாச படம் பகிர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்.. ஏசி மெக்கானிக்.. ஆரம்பத்தில் அரசியல் ஆர்வம் கொண்டவராம்.. நிறைய கட்சி பிரமுகர்களிடமும் நெருங்கி பழகி உள்ளார்.

10 வருடத்துக்கு முன்பு வரை தீவிர அரசியலில்தான் இருந்திருக்கிறார்... இவர் கையெழுத்து ரொம்பவும் அழகாக இருக்குமாம்.. அதனால், கட்சிகாரர்களுக்கு சுவர் விளம்பரங்களில் எழுதிவந்துள்ளார். பிறகு ஒரு கவுன்சிலரிடம் பி.ஏ-வாக வேலை பார்த்துள்ளார்.. மேலும் பிறப்பு- இறப்பு சான்றிதழ், ரேசன் கார்டு, வாங்கி தருவது, அரசு உதவி பணம் வாங்கி தருவது என பொதுமக்களுக்கு உதவியும் செய்து வந்துள்ளர்.

காதலியின் மகள் மீதும் ஆசை.. குறுக்கே வந்த பாட்டி.. ஆசிட் ஊற்றி கொன்ற வாலிபர்.. அடித்தே கொன்ற மக்கள்!

அல்போன்ஸ்

அல்போன்ஸ்

அரசியல்வாதிகளுடன் நெருங்கி பழகியும் அரசு வேலை எதுவும் கிடைக்கவில்லை.. கல்யாணம் ஆகி 10 வருடம் ஆகியும் குழந்தை இல்லை.. இதெல்லாம் சேர்ந்துதான் அல்போன்ஸ் வாழ்க்கையை சிதைக்க ஆரம்பித்துள்ளது.. விரக்தியை மறக்க ஆபாச வீடியோவை பார்க்க ஆரம்பித்தார்.. 4 வருடமாகவே இதற்கு அடிமையாகிவிட்டார்..

ஆபாச படம்

ஆபாச படம்

சிறுமிகளின் ஆபாச படங்கள் நிறைய பார்த்து, அதை அப்லோடு செய்யவும், ஷேர் செய்யவும், தனியாக ஒரு பேஸ்புக் அக்கவுண்ட்டை போலி பெயரில் ஆரம்பித்தார்.. அல்போன்சுக்கு நிறைய பள்ளி, காலேஜ் மாணவர்கள், இளைஞர்கள் பழக்கம் இருந்துள்ளது.. அதனால், பலருக்கும் ஷேர் செய்திருக்கிறார். விளைவு... செல்போனில் ஆபாச வீடியோ பார்ப்பது சம்பந்தமாக ஒரு தகராறுகூட பள்ளி மாணவர்களுக்குள் நடந்துள்ளது.

விசாரணை

விசாரணை

நிறைய பாலியல் புகார்களும் அல்போன்ஸ் மீது இருந்தாலும் இவரிடம் விசாரணை நடத்த.. நடத்த.. பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. வாட்ஸ்அப்பில் 15 குரூப்புகளுக்கு கிறிஸ்டோபர் ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். அவர்கள் குறித்தும் ரகசியமாக விசாரணை நடக்கிறது.

பரபரப்பு

பரபரப்பு

150 பள்ளி, கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் அல்போன்சுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.. அவர்களும் கைது செய்யப்படலாம் என்கிறார்கள். இதைதவிர, ஆபாச வீடியோக்கள் டாக்டர்கள், தொழிலதிபர்கள் என 15 பேருக்கும் அல்போன்ஸ் ஷேர் செய்துள்ளார்.. அதனால் அவர்களும் கைதாகலாம் என்பதால் பெரும் பரபரப்பு இந்த வழக்கில் தொற்றி கொண்டுள்ளது.

 
 
 
English summary
child pornogrophy case issue: Police have decided to investigate over 150 of Christopher Alphonse's friends for sharing the child porn videos
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X