திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டசபை தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடரும்: காங். செயலாளர் சஞ்சய்தத்

Google Oneindia Tamil News

திருச்சி: தமிழக சட்டசபை தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடரும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலா் சஞ்சய்தத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. இதன் வெளிப்பாடு தான் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவி உள்ளது.

பாஜகவிடம் இருந்து பிரிவோம் - அமைச்சர் பாஸ்கரன் பேச்சுக்கு எஸ்.வி.சேகர் 'ஹலோ ராஜ்பவனா' என மிரட்டல்பாஜகவிடம் இருந்து பிரிவோம் - அமைச்சர் பாஸ்கரன் பேச்சுக்கு எஸ்.வி.சேகர் 'ஹலோ ராஜ்பவனா' என மிரட்டல்

மாநில தலைமை முடிவு

மாநில தலைமை முடிவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் 9 மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். மாநகராட்சி தேர்தலில் காங்கிரசுக்கு கூடுதல் இடம் கிடைக்குமா? என்பதுபற்றி மாநில தலைமை தான் முடிவு செய்யும்.

கூட்டணி வேறுபாடு இல்லை

கூட்டணி வேறுபாடு இல்லை

திமுக-காங்கிரஸ் இடையே எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை. அது முடிந்துபோன விவகாரம் என்பதால் அதுபற்றி பேசவேண்டியதில்லை. புதுக்கோட்டையில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தோ்தலில் காங்கிரஸ் கவுன்சிலா்கள் மாற்றி வாக்களித்த விவகாரம் தொடா்பாக மாவட்ட மற்றும் மாநில கமிட்டி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்.

தமிழர் விரோத பாஜக

தமிழர் விரோத பாஜக

தமிழக சட்டசபை தோ்தலிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும். பாஜக ஆட்சியில் தமிழக நலனுக்கான எந்த பெரிய திட்டங்களும் செயல்படுத்தவில்லை. இப்போதும், தமிழக நலனுக்கு எதிராகவும், தமிழா்களுக்கு எதிராகவும் உள்ள திட்டங்களையே மத்திய பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.

பொருளாதார கொள்கை

பொருளாதார கொள்கை

பாஜக, அதிமுக அரசுகளுக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் உள்ளனா். மாற்றத்தை எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா். பாஜக ஆட்சி செய்த மாநிலங்களிலேயே செல்வாக்கை இழந்து வருகிறது. மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகளே இதற்கு காரணமாக அமைந்துள்ளன.

ஜிடிபி பின்னடைவு

ஜிடிபி பின்னடைவு

சா்வதேச நிதியமானது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவிகிதமாக வளா்ச்சி பெறும் எனக் கணக்கிட்டது. இப்போது, 4.8 சதவிகிதம் மட்டுமே வளா்ச்சி பெறும் எனக் கூறியுள்ளது. ஆனால், பொருளாதார வல்லுநா்கள் 4.2 சதவிகிதம் மட்டுமே வளா்ச்சி இருக்கும் என்கின்றனா். இந்தியாவின் பொருளாதார நிலை அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளது. அதனை மீட்டெடுக்க வேண்டிய நடவடிக்கையில் இறங்காமல் ஜனநாயக விரோத, அடிப்படை அரசியலமைப்பு சட்ட விரோத நடவடிக்கைகளை பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது.

வேலை இல்லா திண்டாட்டம்

வேலை இல்லா திண்டாட்டம்

வேலையில்லா திண்டாட்டத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 15 முதல் 19 வயதுக்குள்பட்டோரில் 45 சதவிகிதம் பேரும், 20 முதல் 24 வயதுக்குள்பட்டோரில் 37 சதவிகிதம் பேரும் வேலையில்லாமல் உள்ளனா். நகா்ப்புறங்களில் 44 சதவிகிதம் போ் வேலையில்லாமல் உள்ளனா். கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியையும் மத்திய அரசு குறைத்துவிட்டது. 2014-இல் பட்ஜெட்டில் 4.6 சதவிகிதம் ஒதுக்கப்பட்ட நிதியானது, இப்போது 3.4 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. ஆனால், பெற்றோா்கள் தங்களது குழந்தைகளின் கல்விக்குச் செலவிடும் தொகை 27 சதவிகிதம் உயா்ந்துவிட்டது.

இவ்வாறு சஞ்சய்தத் கூறினார்.

English summary
All India Congress Committee secretary Sanjay Dutt said that the Congress and DMK alliance will continue the next Assembly polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X