திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருச்சிக்கு மற்றொரு மணிமகுடம்.. சூப்பராக மாறப்போகிறது திருச்சி விமான நிலையம்!

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் 10 ஏரோ பிரிட்ஜ்களுடன் புதிய முனையம் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய, 'டெர்மினல்' கட்டடம், வரும், 2022 மார்ச் முதல் செயல்பாட்டிற்கு வரும்' என, இந்திய விமான நிலைய ஆணையம் கூறியது.

திருச்சி விமான நிலையத்தில் ரூ.951.28 கோடியில் புதிய முனையம் அமைக்க திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந் தேதி பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கிவைக்கப்பட்டது.

தற்போது வரை 40 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவு பெறும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழர் பாரம்பரியம்

தமிழர் பாரம்பரியம்

திருச்சி விமான நிலையத்தின் நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் பகுதிகளில் தமிழர்களின் கலை பண்பாட்டை விவரிக்கும் வகையில் வண்ண ஓவியங்கள் வரையப்பட இருக்கிறது. இந்த விமான நிலையமானது 75 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் 2,900 பயணிகளை கையாளும் வகையில் இந்த புதிய முனையம் வடிவமைக்கப்பட்டு வருகிது

 10 ஏரோ பிரிட்ஜ்கள்

10 ஏரோ பிரிட்ஜ்கள்

மேலும் 48 பரிசோதனை கவுண்ட்டர்களும், 10 ஏரோ பிரிட்ஜ்களும் அமைக்கப்பட உள்ளன. அத்துடன் புதிய முனையத்தில் கட்டுப்பாட்டு அறை, தொழில்நுட்ப அறை, ரேடார் கருவி அமைக்கும் பணி உள்ளிட்டவைகள் நடைபெறுகிறது..

துரிதமாகும் பணி

துரிதமாகும் பணி

மேலும் திருச்சி விமான நிலையத்தின் நுழைவுவாயிலில் விமான நிலையத்தின் அருகில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் அதன் சிறப்பு குறித்த தகவல்களும் பதிவிடப்பட உள்ளன. இந்த புதிய முனைய கட்டுமான பணி தற்போது துரிதமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றால் திருச்சி விமான நிலையமானது மற்றுமொரு மைல் கல்லாக அமையும் என்பதில் ஐயமில்லை என அதிகாரிகள் கூறினர்

பணிகள் விறுவிறுப்பு

பணிகள் விறுவிறுப்பு

இந்நிலையில், கட்டுமான பணிகள் குறித்து, ஏ.ஏ.ஐ., நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருச்சி விமான நிலையத்தில், டெர்மினல் கட்டடத்தின் கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும், 2022 மார்ச் மாதம் முதல், இந்த டெர்மினல், பயணியர் செயல்பாட்டிற்கு வரும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Construction of a new terminal with 10 aero bridges at Trichy Airport is in full swing. The new 'terminal' building under construction at Trichy Airport will be operational from March 2022, the Airports Authority of India said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X