திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வந்தே பாரத் மிஷனுக்கு சென்ற 2 பெண் விமானிகள்.. மீட்கப்பட்ட 350+ இந்தியர்கள்.. அசர வைக்கும் ஸ்டோரி!

திருச்சியில் இருந்து கோலாலம்பூர் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானம் 177 பயணிகளுடன் நேற்று இரவு திருச்சி திரும்பியது.

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சியில் இருந்து கோலாலம்பூர் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானம் 177 பயணிகளுடன் நேற்று இரவு திருச்சி திரும்பியது. இந்த விமானத்தின் முதன்மை பைலட் ஒரு தமிழ் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    Vande Bharat Mission: 177 Indians nationals arrive in Tamil Nadu from Malaysia

    கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் சிக்கி இருக்கும் பல்வேறு இந்தியர்களை மீட்கும் பணி மத்திய அரசால் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இதற்கு வந்தே பாரத் மிஷன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 7ம் தேதியில் இருந்து 13ம் தேதி வரை பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் இந்தியா அழைத்து வரப்படுகிறார்கள்.

    பல்வேறு மாநிலங்களுக்கு இவர்கள் விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டு வருகிறார்கள். இவர்களை 14 நாட்கள் தனியாக வைத்த பின், அரசு அவர்களின் வீடுகளுக்கு அனுப்பும்.

    தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள்.. சிறப்பு குழுவை அனுப்பிய மத்திய அரசு.. கொரோனா கண்டெயின்மெண்ட்!தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள்.. சிறப்பு குழுவை அனுப்பிய மத்திய அரசு.. கொரோனா கண்டெயின்மெண்ட்!

    திருச்சி விமானம்

    திருச்சி விமானம்

    இந்த நிலையில் திருச்சியில் இருந்து நேற்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று மதியம் மலேசியா சென்றது. கோலாலம்பூர் சென்ற அந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானம் 177 பயணிகளுடன் நேற்று இரவு திருச்சி திரும்பியது. இந்த விமானத்தின் முதன்மை பைலட் ஒரு தமிழ் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் பெயர் கேப்டன் கவிதா ராஜ்குமார்.

    பெண் விமானி

    பெண் விமானி

    மிகவும் துணிச்சலாக அந்த பெண், பயணிகளை மலேசியா சென்று அழைத்து வந்துள்ளார். இவருக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த விமானத்தில் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயணிகள் எல்லோரும் வெப்ப சோதனைக்கு பின் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இன்று காலை துபாயில் இருந்து இதேபோல் இரண்டு விமானங்கள் சென்னை வந்தது.

    கொச்சி மஸ்கட் விமானம்

    கொச்சி மஸ்கட் விமானம்

    மேலும் காலையில் 182 பயணிகள் கொண்ட விமானம் ஒன்று மற்றும் 177 பயணிகள் கொண்ட விமானம் ஒன்று இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதேபோல் இன்னொரு விமானம் கொச்சியில் இருந்து மஸ்கட் சென்று மீண்டும் கொச்சி திரும்பி வந்தது. நேற்று இரவு இந்த விமானம் திரும்பி வந்தது. இந்த விமானத்தில் 177 பயணிகள் வந்தனர். இந்த விமானத்தையும் பெண் விமானி ஒருவர்தான் ஓட்டி வந்தது.

    விமானி பிந்து செபஸ்டியன்

    விமானி பிந்து செபஸ்டியன்

    பிந்து செபாஸ்டியன் என்ற பெண் விமானி இந்த விமானத்தை ஓட்டி வந்தனர். இவர் கேரளாவை சேர்ந்த பெண் விமானி என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இன்னொரு விமானம் நேற்று மதியம் மஸ்கட்டில் இருந்து திரும்பி வந்தது. இதில் 186 பயணிகள் வந்தனர். இன்னும் 4 நாட்கள் இதேபோல் கூடுதல் பயணிகள் இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர்.

    English summary
    Coronavirus: 2 Women Pilot from Air India express rescued more than 350+ Indians in the mega evacuation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X