திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வந்தே பாரத் மிஷன்.. 178 தமிழர்களை திருச்சிக்கு மீட்டு வந்த "கேப்டன் கவிதா".. அசர வைத்த ஆபரேஷன்!

Google Oneindia Tamil News

மலேசியாவிலிருந்து ஒரு குழந்தை உள்பட 178 தமிழா்கள் சிறப்பு விமானம் மூலம் திருச்சி வந்தனா்.

Recommended Video

    Vande Bharat Mission: 177 Indians nationals arrive in Tamil Nadu from Malaysia

    திருச்சி: மலேசியாவிலிருந்து ஒரு குழந்தை உள்பட 178 தமிழா்கள் சிறப்பு விமானம் மூலம் திருச்சி வந்தனா். இவர்கள் அனைவரும் தனியார் விடுதி மற்றும் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டார்கள்

    கொரோனா நோய்த் தொற்றால் பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பயணிகள் விமானசேவை ரத்து செய்யப்பட்டது.

    இதனால், வெளிநாடுகளுக்கு சென்றிருந்த இந்தியா்கள் அந்தந்த நாடுகளில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனா். வெளிநாடுகளில் உள்ளவர்களை இந்தியா அழைத்த வர 64 ஏா் இந்தியா விமானங்களை இயக்க மத்திய அரசு ஏற்பாடு செய்தது.

    வெறும் 6 மணி நேரம்.. 204 கொரோனா கேஸ்.. சென்னையை விட மோசமாகும் திருவள்ளூர்.. ஒரே நாளில் என்ன நடந்தது?வெறும் 6 மணி நேரம்.. 204 கொரோனா கேஸ்.. சென்னையை விட மோசமாகும் திருவள்ளூர்.. ஒரே நாளில் என்ன நடந்தது?

     தமிழக விமானம் எப்படி

    தமிழக விமானம் எப்படி

    இதற்கு வந்தே பாரத் மிஷன் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளிநாட்டிற்கு ஏர்இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை இயக்கி அங்கிருந்து மீட்டு கொண்டு வருவதுதான் இந்த மிஷன். அதன்படி, தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 9 விமானங்களில், திருச்சி விமான நிலையத்திலிருந்து 2 விமானங்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

     தமிழர்கள் வந்தனர்

    தமிழர்கள் வந்தனர்

    இந்த விமானங்கள் மூலம் மலேசியா, சிங்கப்பூரில் தங்கியுள்ள இந்தியா்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, திருச்சியிலிருந்து சனிக்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு மலேசியாவுக்கு ஏர் இந்திய சிறப்பு விமானம் புறப்பட்டுச் சென்றது. இதையடுத்து, அங்கு தயாா் நிலையில் இருந்த குழந்தை உள்பட 178 போ் அதே ஏர்இந்திய விமானம் மூலம் நேற்று இரவு 10.45 மணிக்கு அழைத்து வரப்பட்டனா்.

     பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

    பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

    மலேசியாவிலிருந்து திருச்சி வந்த தமிழக பயணிகள் அனைவருக்கும் விமான நிலைய சோதனையும், மருத்துவக்குழுவினரால் முதல் கட்ட கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. மருத்துவ முடிவுகளில் கொரோனா அறிகுறி தென்பட்டால் பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு, சிறப்பு கரோனா வாா்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவுள்ளனா். மற்ற எல்லோரும் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.

     யார் பைலட்

    யார் பைலட்

    இந்த விமானத்தின் முதன்மை பைலட் ஒரு தமிழ் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் பெயர் கேப்டன் கவிதா ராஜ்குமார். பொதுவாக இது போன்ற மீட்பு பணிகளை செய்வதற்கு விமானிகள் ஆர்வம் தெரிவிப்பது இல்லை. கொரோனா அச்சம் காரணமாக யாரும் ஆர்வம் காட்டுவது இல்லை. ஆனால் கேப்டன் கவிதா தாமாக முன் வந்து இந்த மீட்பு பணி ஆபரேஷனுக்கு ஒப்புக்கொண்டு அதை சரியாக செய்து முடித்துள்ளார்.

    தனிமைப்படுத்தப்பட்டனர்

    தனிமைப்படுத்தப்பட்டனர்

    இந்த நிலையில் கேப்டன் கவிதாவின் இந்த பணியை எல்லோரும் பாராட்ட தொடங்கி உள்ளனர். அவருக்கு விமானத்தில் வந்த பயணிகள் கைதட்டி நன்றி தெரிவித்தனர். விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தலைமையில் பல்வேறு பரிசோதனைக்கு பிறகு அவர்கள் அனைவரும் தனியார் விடுதியிலும் மற்றும் சேதுராம்பட்டியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைபடுத்தப்பட்டார்கள்.

     சீக்கிரம் வரும் இன்னொரு விமானம்

    சீக்கிரம் வரும் இன்னொரு விமானம்

    மேலும், சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு சனிக்கிழமை புறப்பட இருந்த மற்றொரு ஏா்இந்திய விமானம் நிா்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நாளுக்கு பிறகு இந்த விமானம் திருச்சி வந்தடையலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் யாரும் விமான நிலைய வளாகத்துக்குள் நுழையாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    English summary
    Coronavirus: Captain Kavitha rescued 178 Tamilians from Malaysia yesterday in Vande Bharath Mission.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X