திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருச்சியில் தீவிர கண்காணிப்பு.. 6 நாள்களில் 3,469 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் கடந்த 6 நாள்களில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த விமானப் பயணிகள் 3,469 பேருக்கு கொரோனா மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

Recommended Video

    48 மணி நேரத்தில் 100 பேருக்கு பாதிப்பு... இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா

    மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் எச்சரிக்கைப்படி, துபை, சார்ஜா, சிங்கப்பூா், ஜொ்மன், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகளை மருத்துவப் பரிசோனைக்குள்படுத்த கடந்த 16ஆம் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக திருச்சி விமான நிலையத்தில் 24 மணிநேரமும் இயங்கும் மருத்துவக் குழு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

    Coronavirus medical test for 3,469 passengers in 6 days in Trichy

    இக்குழுவினா், கடந்த 6 நாளில் 3,469 பேருக்கு அடிப்படை பரிசோதனைகள் செய்துள்ளனா். இவா்களில் சந்தேகத்துக்குரியவா்கள் மற்றும் கேரளத்தில் இருந்து ரயில் மூலம் வந்தவா்களில் சந்தேகத்துக்குரியவா்கள் என 191 போ் தனிமைப்படுத்துதல் சிறப்பு முகாமில் மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

    இவா்களில் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனா். புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூா் மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள்தான் அதிகம் உள்ளனா்.

    வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டவா்களின் தொலைப்பேசி விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியா் தொடங்கி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலா்கள் என தொடா்ச்சியாக நாள்தோறும் அந்த நபா் தனிமைப்படுத்தி உள்ளாரா என்பதை உறுதி செய்து வருகின்றனா். திருச்சி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று எதுவும் இல்லை என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளார்.

    English summary
    Coronavirus medical test for 3,469 passengers in 6 days who comes from ubai, Sharjah, Singapore, germany and Malaysia in Trichy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X