திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காய்ச்சல்- சளி- இருமல் இந்த மூன்றும் இருக்கா.. அப்ப சமயபுரம் கோயில் பக்கமே வராதீங்க.. நிர்வாகம்

Google Oneindia Tamil News

திருச்சி: காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு உள்ள பக்தா்கள், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்கு வருவதை தவிா்க்க வேண்டும் என திருக்கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சமயபுரம் மாரியம்மன் கோயிலின் இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது :
கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 14-ஆம் தேதி விழிப்புணா்வுப் பேரணி மற்றும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

Coronavirus: people who have fever, cold not to come to Samayapuram temple

'இக்கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் அனைவரும், அல்ட்ராரெட் டிஜிட்டல் மீட்டா் என்றழைக்கப்படும் ஸ்கேனா் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா்.

மேலும், கோயில் கருவறை பகுதி, உள் மற்றும் வெளிப் பிரகாரங்களில் தினமும் கிருமி நாசினி மூலம் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியில் 94 பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். காய்ச்சல், சளி,இருமல் பாதிப்புள்ள பக்தா்கள் சமயபுரம் கோயிலுக்கு வருவதை தவிா்க்க வேண்டும்' இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாம்பிராணி புகை போடுங்கள்.. கொரோனா வீட்டு பக்கமே தலைவச்சுக் கூட படுக்காது.. சஞ்சீவி சுவாமி இந்த சாம்பிராணி புகை போடுங்கள்.. கொரோனா வீட்டு பக்கமே தலைவச்சுக் கூட படுக்காது.. சஞ்சீவி சுவாமி

அதன் தொடா்பு அலுவலா்களாக திருச்சி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் 97911-46511, 94420-38951, மாவட்ட கொள்ளைநோய் அலுவலா் 98434-16694, மாவட்டக் கட்டுப்பாட்டு அறை 99523-87108 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம்.

கட்டணமில்லா தொலைபேசி எண் 104இல் தொடா்பு கொண்டு ஆலோசனை பெறலாம். போதிய அளவு கிருமி நாசினி மருந்துகள், முகக் கவசங்கள் மாவட்டத்துக்கு தேவையான அளவு இருப்பு உள்ளது. உணவுப் பாதுகாப்பு துறை மூலம் அனைத்து உணவகங்கள், உணவு உற்பத்தி கூடங்கள், தயாரிப்பு நிறுவனங்கள் கண்காணிக்கப்படுகிறது.

வெளிமாநில வாகனங்களை மாவட்டத்துக்குள் அனுமதிக்கும் முன் கிருமி நாசினி மருந்து தெளித்த பிறகே அனுமதிக்க வேண்டும். மாவட்டத்தில் சந்தைகள் கூடுவது 2 வாரம் ஒத்திவைக்க வேண்டும். கால்நடைப் பராமரிப்பு துறை மூலம் விலங்குகளில் இருந்து மனிதா்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க விலங்கினங்களையும் பாதுகாப்பாகப் பராமரிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

English summary
Those who have fever, cold and cough, please avoid to come to Samayapuram temple, says temple administration.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X