திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருச்சி அம்மா உணவகங்களில் அவித்த முட்டையுடன் 3 வேளையும் இலவச உணவு.. அமைச்சர் சிறப்பு பேட்டி

Google Oneindia Tamil News

திருச்சி : திருச்சி கிழக்கு தொகுதிகுட்டப்பட்ட அம்மா உணவகங்களில் ஊரடங்கு முடியும் வரை இலவசமாக முன்று வேளையும் அவியல் முட்டையுடன் உணவு வழங்குவதற்காக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

திருச்சி கிழக்கு தொகுதிகுட்டப்பட்ட அம்மா உணவகங்களில் இலவசமாக ஊரடங்கு முடியும் வரை மூன்று வேலையுடன் மற்றும் அவியியல் முட்டையுடன் இலவச உணவு வழங்குவதற்காக ரூ.1லட்சத்து ஜம்பதாயிரம் ரூபாயை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் வழங்கினார்.

daily 3 times free food with boiled egg at Trichy Amma Unavagam: says Minister vellamandi nadarajan

ஊரடங்கு உத்தரவு நீங்கும்வரை உணவின்றி தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.இதைத் தொடர்ந்து உணவுடன் முட்டை, பழங்களும் சேர்த்து வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், திருச்சி கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அம்மா உணவகங்களில் இலவச உணவு திட்டத்துக்காக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் காசோலையை மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.

பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழக சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது : "தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவை வரும் மே மாதம் 3ம் தேதி அரசு அறிவித்துள்ளது.

daily 3 times free food with boiled egg at Trichy Amma Unavagam: says Minister vellamandi nadarajan

இந்நாட்களில் ஏழை எளிய மக்கள் உணவுக்கு அவதிப்படும் நிலையை கருத்தில் கொண்டு அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி கிழக்கு தொகுதி உட்பட்ட 7 அம்மா உணவகத்திலும் காலை, மதியம் மற்றும் இரவு, மூன்று வேளைகளும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து அதற்காக ரூபாய் 1.50லட்சத்துக்கான காசோலையை வழங்கி உள்ளேன். மதியம் சாப்பிடும் அனைவருக்கும் அவியல் முட்டையுடன் சேர்த்து வழங்கப்படும்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு 300 மூட்டை அரிசி அம்மா உணவகத்திற்காக வழங்கியது அடுத்து மீண்டும் இதர மிளகாய் பொருட்கள் மற்றும் காய்கறி வாங்குவதற்காக இத்தொகையை வழங்கியுள்ளேன். ஊரடங்கு உத்தரவை தளர்த்தும் வரையில் தினந்தோறும் அனைத்து திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து அம்மா உணவகத்திலும் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க அறிவுறுத்தி உள்ளேன். இதனை ஏழை எளிய மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இன்னும் 9 பேர்தான் மீதம்.. ராக்கெட் வேகத்தில் 42 பேரை குணப்படுத்திய திருச்சி.. விரைவில் கொரோனா ஃபிரிஇன்னும் 9 பேர்தான் மீதம்.. ராக்கெட் வேகத்தில் 42 பேரை குணப்படுத்திய திருச்சி.. விரைவில் கொரோனா ஃபிரி

அதேபோல் திருச்சி மாநகரத்தில் உள்ள அனைத்து காவல்துறையினருக்கு கிருமி நாசினி மற்றும் எனது சொந்த செலவில் வழங்கியுள்ளேன். எனது தொகுதி உட்பட அனைத்து பகுதிகளிலும் தினமும் ஒவ்வொரு வார்டுக்கும் சென்று தூய்மை பணிகளை தொடர்ந்து நேரில் பார்வையிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறேன் இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் திருச்சி மாநகர மாவட்ட துணை செயலாளர் ஜாக்குலின், மாலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் அன்பழகன், ஏர்போர்ட் பகுதி கழக செயலாளர் வெல்லமண்டி சண்முகம், திருச்சி மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் சுரேஷ் குப்தா, ஜெயக்குமார், வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு, மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

English summary
Minister vellamandi nadarajan said that daily 3 times free food with boiled egg at Trichy Amma Unavagam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X