திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வரையும், என்னையும் யாராலும் பிரிக்க முடியாது...பத்திரிகைகள் மீது பழிபோட்ட ஓ.பி.எஸ்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Deputy cm o.panneerselvam trichy Pressmeet

    திருச்சி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், தன்னையும் யாராலும் பிரிக்க முடியாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

    திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பத்திரிகையாளர்கள் தான் முதல்வரையும் தன்னையும் பிரிக்க முயற்சிப்பதகவும், அந்த முயற்சி ஒரு போதும் பலிக்காது எனவும் தெரிவித்தார். முதல்வருடன் கருத்து வேறுபாடு என்பதெல்லாம் பொய்யான தகவல்கள் எனவும், சுமூகமான உறவே உள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.

    deputy cm o.panneerselvam trichy interview

    இருமொழிக் கொள்கை

    மேலும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே உள்ளதாகவும், இந்தக் கொள்கையில் இருந்து தமிழக அரசு பின்வாங்காது எனவும் கூறினார். மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை நடத்துவதாகவும், இதில் எந்த அரசியலும் இல்லை என்றும் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

    தேனி தொகுதியில் ''உங்களுடன் நான்'' செயலி அறிமுகம்...! ஓ.பி.எஸ்.மகனின் புது முயற்சிதேனி தொகுதியில் ''உங்களுடன் நான்'' செயலி அறிமுகம்...! ஓ.பி.எஸ்.மகனின் புது முயற்சி

    ஸ்டாலினுக்கு பதிலடி

    முந்தைய திமுக ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா பலமுறை அரசின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டும் அப்போது அளிக்கப்படவில்லை என்றும், அதை மறந்துவிட்டு இன்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கிறார் என்றும் குறிப்பிட்டார். மேலும், கூவம் ஆற்றை புனரமைக்கும் பணிகள் தொடர்பாக 2009-ல் சிங்கப்பூர் சென்று வந்த ஸ்டாலின், அதற்கு பிறகு எந்த விளக்கத்தையும் தரவில்லை என குற்றஞ்சாட்டினார்.

    பொய்

    கருப்பு பணத்தை முதலீடு செய்வதற்காக அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சென்றார்கள் எனக் கூறப்படுவது ஜமுகாளத்தில் வடிகட்டிய பொய் எனக் கூறிய ஓ.பி.எஸ்.,
    முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் அரசு முறை பயணத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அவதூறு பரப்பப்படுவதை ஏற்க முடியாது எனக் கூறினார்.

    English summary
    deputy cm o.panneerselvam trichy interview
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X