'குடி'மக்களுக்கு ஒர் அறிவிப்பு.. 25ஆம் தேதி மாலை முதல் 27ஆம் தேதி வரை டாஸ்மாக் லீவு!
திருச்சி: உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி மற்றும் ஊரகத் தேர்தல் நடைபெறவுள்ளது. உள்ளாட்சி மற்றும் ஊரக தேர்தல் வரும் 27 மற்றும் 30ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்பு மனுத்தாக்கல் அவகாசம் நிறைவடைந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் கடந்த 19ஆம் தேதி வெளியிட்டது.
அதன்படி 27 மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு 3 லட்சத்து 2 ஆயிரம் வேட்பு மனுக்கள் பெறப்பட்டதில் 48 ஆயிரத்து 891 பேர் மனுக்களைத் திரும்பப் பெற்றுள்ளனர்.மேலும் 18 ஆயிரத்து 570 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் போட்டியிருகின்றனர். இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதாவது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி மாலை 5 மணி முதல் 27 ஆம்ம் தேதி மாலை 5 மணி வரை டாஸ்மாக் விடுமுறை விடப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதேபோல் டிசம்பர் 28ஆம் தேதி மாலை 5 மணி முதல் 30ஆம் தேதி மாலை 5 மணி வரையும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜனவரி 2ஆம் தேதியும் டாஸ்மாக் விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ளார்.
இதேபோல் சேலம் மாவட்டத்திலும் டிசம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 30 ஆம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் ஜனவரி 2 ஆம் தேதியும் டாஸ்மாக் விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications