திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வந்தாச்சு பண்டிகைகள்.. விட்டாச்சு சிறப்பு ரயில்கள்.. சென்னை- நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Chennai to Nellai Special Train

    திருச்சி: பண்டிகை கால கூட்டநெரிலை சமாளிக்க சென்னையிலிருந்து திருச்சி வழியாக நெல்லைக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு : விழுப்புரத்திலிருந்து அக்.2, 9, 16, 23, 30 ஆகிய நாள்களில் மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (ரயில் எண்: 06043) அடுத்த நாள் காலை 8.25 மணிக்கு செகந்திராபாத்துக்கு சென்றடையும்.

    தாம்பரத்திலிருந்து அக்.9 ஆம் தேதி காலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06025) அடுத்த நாள் காலை 10 மணிக்கு திருச்சிக்கு சென்றடையும். அதுபோல், திருச்சியிலிருந்து அக்.5 ஆம் தேதி பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06026) தாம்பரத்துக்கு இரவு 7.15 மணிக்கு சென்றடையும்.

    ஏன் தாத்தா இப்படி அடம் பிடிக்கிறே.. கட்டுனா சிந்துவைத்தான்.. விடாமல் விரட்டும் 75 வயது மலைச்சாமிஏன் தாத்தா இப்படி அடம் பிடிக்கிறே.. கட்டுனா சிந்துவைத்தான்.. விடாமல் விரட்டும் 75 வயது மலைச்சாமி

    திருநெல்வேலிக்கு ரயில்

    திருநெல்வேலிக்கு ரயில்

    தாம்பரத்திலிருந்து அக்.5 ஆம் தேதி இரவு 8.50 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82603) அடுத்தநாள் காலை 8.45 மணிக்கு திருநெல்வேலிக்கு சென்றடையும். அதுபோல், திருநெல்வேலியிலிருந்து அக்.8 ஆம் தேதி இரவு 9.40 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82604) அடுத்தநாள் காலை 10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

     எந்தெந்த நாட்கள் ரயில்

    எந்தெந்த நாட்கள் ரயில்

    மேலும், சென்னை எழும்பூரிலிருந்து அக்.4, 25 மற்றும் நவ.1,8 ஆகிய நாள்களில் மாலை 6.50 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82601) அடுத்தநாள் மாலை 4 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். அதுபோல், திருநெல்வேலியிலிருந்து அக்.7,28 மற்றும் நவ.3,10 ஆகிய நாள்களில் மாலை 6.15 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82602)அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    நவ.15,22,29ல் சிறப்பு ரயில்

    நவ.15,22,29ல் சிறப்பு ரயில்

    கூடுதலாக, சென்னை எழும்பூரிலிருந்து அக்.11,18 மற்றும் நவ.15,22,29 ஆகிய நாள்களில் மாலை 6.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06001) அடுத்த நாள் காலை 6 மணிக்கு திருநெல்வேலிக்கு சென்றடையும்.

    தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்

    தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்

    அதுபோல், திருநெல்வேலியிருந்து அக்.20 மற்றும் நவ.17,24, டிச.1 ஆகிய நாள்களில் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06002) அடுத்த நாள் அதிகாலை 2.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில்கள், கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.

    தாம்பரத்திலிருந்து ரயில்கள்

    தாம்பரத்திலிருந்து ரயில்கள்

    மேலும், திருநெல்வேலியிருந்து அக்.3,10,17,24,31 மற்றும் நவ.7,14,21,28 ஆகிய நாள்களில் மாலை 5.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06036) அடுத்தநாள் காலை 8.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும். அதுபோல், தாம்பரத்திலிருந்து அக்.11,18 மற்றும் நவ.15,22,29 ஆகிய நாள்களில் மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06035) அடுத்தநாள் காலை 10 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.தாம்பரத்திலிருந்து சுவிதா ரயில்: தாம்பரத்திலிருந்து அக்.25 ஆம் தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82615) அடுத்தநாள் காலை 10 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

     வேளாங்கண்ணிக்கு ரயில்கள்

    வேளாங்கண்ணிக்கு ரயில்கள்

    எா்ணாகுளத்திலிருந்து அக்.5,12,19,26 மற்றும் நவ. 2,9,16,23,30 ஆகிய நாள்களில் காலை 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06015) அடுத்தநாள் காலை 7 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். அதுபோல், வேளாங்கண்ணியிலிருந்து அக். 6, 13, 20, 27 மற்றும் நவ.3, 10, 17, 24, டிச.1 ஆகிய நாள்களில் மாலை 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06016) அடுத்த நாள் பிற்பகல் 2 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்"3 இவ்வாறு ரயில்வே வெளியிட்ட அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    diwali and ayudha pooja festival trains announced by southern railway, people get rains chennai to nellai upcoming festivals
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X