திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குறை சொல்வதை விடுங்கள்.. பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள்.. சுஜித் கல்லறையில் பிரேமலதா

Google Oneindia Tamil News

Recommended Video

    குறை சொல்வதை விடுங்கள்.. பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள்.. சுஜித் கல்லறையில் பிரேமலதா பேட்டி -வீடியோ

    திருச்சி: எத்தனை கோடி நிதி கொடுத்தாலும் சுஜித்தின் மரணத்திற்கு ஈடாகாது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

    திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ- கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித் வில்சன். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.

    அப்போது அவர் அங்கு மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். அவரை மீட்க பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டது. எனினும் அக்குழந்தையை உயிரோடு மீட்க முடியவில்லை.

    எச்.ராஜா டிவீட்: தீவிர முயற்சி எடுத்தது அரசு.. சுஜீத்தை உயிருடன் மீட்க முடியாதது வருத்தம் அளிக்கிறதுஎச்.ராஜா டிவீட்: தீவிர முயற்சி எடுத்தது அரசு.. சுஜீத்தை உயிருடன் மீட்க முடியாதது வருத்தம் அளிக்கிறது

    நல்லடக்கம்

    நல்லடக்கம்

    இதையடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட குழந்தையின் உடல் பாத்திமாபுதூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    அஞ்சலி

    அஞ்சலி

    சுஜித்தின் கல்லறைக்கு ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோல் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தும் சுஜித்தின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

    ஈடாகாது

    ஈடாகாது

    அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் எத்தனை கோடிகள் நிதி கொடுத்தாலும் சுஜித்தின் மரணத்திற்கு ஈடாகாது. குறை சொல்வதை விட இதை பாடமாக எடுத்துக் கொண்டு இனி இது போல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    மரணம்

    மரணம்

    இறப்பில் கூட அரசியல் செய்வது திமுகவும் ஸ்டாலினும் மட்டுமே. குழந்தையை மீட்கும் நேரத்தில் கடவுளை பற்றியும் மரணத்தை பற்றியும் குறை சொல்வது தவறான விஷயம் என்றார் பிரேமலதா.

    English summary
    DMDK Treasurer Premalatha Vijayakant says that we have to take this Sujith incident as lesson and avoid these incidents to be happened in future.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X