திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுகக்காரனை கொரோனா என்ன செய்யும்.. நெருங்கி சென்று.. கே.என்.நேருவை திகில்படுத்திய திமுக தொண்டர்கள்

Google Oneindia Tamil News

திருச்சி: "நாம் திமுகவை சேர்ந்தவர்கள்.. நம்மை தொற்று ஒன்றும் செய்யாது" என்று சிரித்துக்கொண்டே, சமூக இடைவெளி இல்லாமல் திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேருவை நெருங்கி சுற்றி நின்றனர் அக்கட்சி தொண்டர்கள்.

ஏழை மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு நேற்று நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

DMK cadres and KN Nehru missing social distancing in Trichy

கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் ஏழை, எளிய மக்கள் வறுமையில் வாடி வருகின்றனர்.

கொரோனா கொடுமையை விட, பசிக்கொடுமை மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதையடுத்து, கலைஞர் அறிவாலயத்தில் முதன்மைச் செயலர் நேரு தலைமையில் மாற்றுத்திறனாளிகள் ஏழை குடும்பங்களுக்கு அரிசி மற்றும் சமையல் பொருட்கள் கொடுக்கப்பட்டன.

DMK cadres and KN Nehru missing social distancing in Trichy

அதை ஏராளமானவர்கள் பெற்றுச் சென்றனர். பின்னர் கே.என்.நேரு காரில் ஏறினார். அப்போது, திமுக தொண்டர்கள் நேருவை சூழ்ந்து காணப்பட்டனர். அப்போது தொண்டர்கள் கூறுகையில் "நாம் திமுகவை சேர்ந்தவர்கள்.. நம்மை தொற்று ஒன்றும் செய்யாது" என்று சிரித்துக்கொண்டே, சமூக இடைவெளி இல்லாமல் நேருவை நெருங்கி சுற்றி நின்றனர்.

மத்திய அரசு அதிரடி.. பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.10, டீசலுக்கு ரூ.13 கலால் வரி உயர்த்தப்பட்டதுமத்திய அரசு அதிரடி.. பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.10, டீசலுக்கு ரூ.13 கலால் வரி உயர்த்தப்பட்டது

இச்சம்பவத்தால் திருச்சியில் தொற்று பரவி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. கொரோனா தொற்று, ஜாதி, மதம், அரசியல் கட்சி பாகுபாடு பார்க்காது. மக்களும், தலைவர்களும்தான் விழிப்போடு இருந்து, இந்த விஷயத்தை கையாள வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம்.

English summary
"We belong to the DMK. Nothing will infect us," DMK cadres tells while nearing KN Nehru in Trichy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X